லால்சவுக்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றுவதற்காக பஞ்சாபிலிருந்து பேரணியாக வந்த பாரதிய ஜனதா தலைவர்கள் சுஷ்மா-சுவராஜ், அருண் ஜெட்லி, மற்றும் இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாக்கூர் போன்றோரை காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். 200க்கும் அதிகமான் பா.ஜ. தொண்டர்கள், கதுவாவில் இருக்கும் போலீஸ் பயிற்சிகல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தனர்.

சுஷ்மா சுவராஜும் மற்றும் அருண் ஜெட்லி ஹால்மார்க்-ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டனர் இருந்தனர்.

குடியரசு தினவிழா அமைதியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து . சுஷ்மா சுவராஜும் மற்றும் அருண் ஜெட்லி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்கு பிறகு சுஷ்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை தடுத்து உமர் அப்துல்லா, தீவிரவாதிகளுக்கு ஒருபுறம் ஊக்கம் தருகிறார் . மற்றொருபுறம், குடியரசு தின விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கிறார். உமர் அப்துல்லாவின் இந்த செயலுக்கு தகுந்தபதிலடி கொடுப்போம்’ என தெரிவித்தார் .

{qtube vid:=VRWkIMLVl58}

Leave a Reply