தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திட்டங்குளத்தை சேர்ந்த இராணுவ வீரர் கருப்பசாமி அவர்கள் காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.தேசம் காக்கும் பணியில் உயிர் நீ்த்த இராணுவ வீரர் கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன், மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு ராணுவ வீரரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

Comments are closed.