என் உணர்வோடு உணர்வாகி விட்ட என் அருமை தாமரை சொந்தங்களே,

இன்று நம் தாய்திருநாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது , நம் தர்மத்திற்கும் சவால்கள் மிகுந்துள்ளன , தமிழகத்தின் நிலையும், தமிழர் தம் நிலையம் சரிந்து கொண்டிருக்கின்றன , இப்படிப்பட்ட நிலையில் நாடு காக்கவும் , தர்மம் காக்கவும் சபதம் எடுத்துள்ள நாம் வாழாவிருக்க

முடியாது , நாமும் ஒய்ந்து விட்டால் நம்மிலும் தவறு செய்தவர் யாரும் இருக்க முடியாது. எனவேதான் நாடு காக்க வாருங்கள் , தமிழர் வாழ்வை உயர்த்த வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றேன்.

மத்தியிலும் , மாநிலத்திலும் “தாமரை சங்கமம” இது தாமரைகளின் சந்திப்பு. எனவே நாம் குடும்பம் குடும்பமாக லட்சக்கணக்கில் கூட வேண்டும், அதில் தாங்களும் தங்களை சார்ந்தோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நாட்டின் வளர்ச்சியில் நானும் பங்கு பெற்றேன் என்ற பெருமையை அடைய வேண்டும் .

ஆகவே 2012 மே 10,11 தேதிகளில் மதுரை மீனாட்சி அன்னையின் மண்ணில் நடக்கும் தாமரை சங்கமத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் கலந்து கொள்வதோடு நம் பந்தங்களையும் அழைத்து வர அன்புடன் வேண்டுகிறேன்

தாமரை சங்கமத்தில் தங்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்

அன்புடன் என்றும் தாயக பணியில்
பொன். இராதாகிருஷ்ணன்
பா.ஜ.க. மாநில தலைவர்

Tags; thamarai sangamam, தாமரை சங்கமம, தாமரை ஆட்சி மலர்ந்திட

Leave a Reply