நீங்கள் தீவிரவாதிகளின் மூலம் கொள்ளை புறமாக தாக்கினீர்களே என்றால், நாங்கள் எங்கள் வீரமிகு ராணுவத்தின் மூலம் நேரடியாக சொல்லியே அடிப்போம், கொலைகார பயங்கரவாதிகளை அவர்கள் மண்ணிலேயே வந்து கொத்துக் கொத்தாக உயிர்பலி கொள்வோம், என்று தனது செயலின் மூலம் இந்த உலகுக்கு பாரதத்தின் உண்மையான பலத்தை பறைசாற்றியுள்ளது மத்திய நரேந்திர மோடி அரசு.

கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

“நமது வீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போதும் வீணாகாது. அவர்களின் வீரதீரத்தை நாடு பல நேரங்களில் கண்டுள்ளது. அவர்களின் துணிச்சல் தீரத்தில் சந்தேகப்படும் ஒருவர் கூட இந்நாட்டில் இருக்கமுடியாது.

பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்தபதிலடி தருவார்கள். சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப் படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது என்று வெளிப்படையாக சவால் விட்டார்” பிரதமர் நரேந்திர மோடி..

முந்தைய அரசுகளை போன்று வாய்ஜாலத்துடன் நின்றுவிடாமல் செயலிலும் இறங்கினார். இந்தியா இரண்டாவது surgical strike தயாரானது, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. முதலில் பாகிஸ்தானை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டோம். 53 நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றது. உள்நாட்டில் இருக்கும் துரோகிகள் களையெடுக்கப் பட்டனர். முக்கிய தீவிரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் சுகபோக சலுகைகளை அனுபவித்து கொண்டு, பாகிஸ்தானின் மண்ணின் மைந்தர்களாகவே காஷ்மீரில் ஆடம்பர வாழ்வு வாழ்ந்துவந்த பிரிவினைவாத தலைவர்களுக்கான அரசின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. யாசின் மாலிக் போன்ற தேசத்துரோகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் பிறகே 12 நாட்கள் கழித்து நரேந்திர மோடியின் சவால் உயிரோட்டம் பெற்றது இந்த முறை தரைப்படைக்கு பதிலாக விமானப்படை களம் இறக்கப்பட்டது அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீத துல்லிய தாக்குதலுக்கு பெயர்பெற்ற 12 ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் , பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பாலகோட், முசாபராபாத், சகோதி பயிற்சி முகாம்கள் மீது ,தாக்குதல் நடத்தி அவர்களை கூண்டோடு அழித்துள்ளது. இதில் 350 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ஏழு ஏக்கரில் 700 பேர் வரை தங்கி பயிற்சி பெறக்கூடிய நவீனமயமான தீவிரவாத பயிற்சி முகாம் அளிக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானின் இந்த ஒரு மூளையிலும் இந்திய ராணுவத்தால் புகுந்து தாக்குதல் நடத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல்லும் கூட, இனியும் தீவிரவாதிகள் இந்தியாவை தாக்குவார்களே என்றால். மீண்டும் இந்திய ராணுவம் எல்லையை கடக்கும், தீவிரவாத முகாம்களை துவம்சம் செய்யும். பாகிஸ்தானின் ஆதரவு தொடருமே என்றால், அதுவும் தாக்குதலுக்கு உள்ளாகும். ஏனென்றால் இது நரேந்திர மோடியின் புதிய இந்தியா.

நன்றி தமிழ் தாமரை வெங்கடேஷ்

Tags:

Leave a Reply