பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .

 ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் வல்லவர். அதை நான் பார்த்திருக்கிறேன். பிகார் மக்களும் அதை ரசித்த துண்டு. ஆனால், அண்மைக் காலமாக லாலுவுக்கும், நிதீஷுக்கும் இடையே குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவது, உண்மைக்கு புறம்பான தகவல் களை கூறுவது என பல விஷயங்களில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதுபோல, வேடிக்கை காட்டுவதிலும் அவர்களிடையே போட்டி நிலவுகிறது. நிதீஷ் குமார் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தியதை நான் நேற்று பார்த்தேன். தனது ஆதரவாளர்கள், செய்தியாளர்களை அருகில் வைத்து கொண்டு கவிதையை ஒப்பித்தார். இதுபோன்ற வேடிக்கையின் மூலம், லாலுவை மிஞ்சிவிடலாம் என் அவர் நினைக்கிறார்.

 மகாகூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால், "த்ரி இடியட்ஸ்' (ஆமிர் கான் நடித்த பிரபல ஹிந்திப் படம்) படத்திலிருந்த பாடலை, அவர் ஏன் தனது நிகழ்ச்சிக்கு தேர்வுசெய்தார் என்பதை பார்த்து நான் ஆச்சர்யப் பட்டேன். கவிதையை நையாண்டியாக தெரிவிக்க விரும்பினால், த்ரி இடியட்ஸ் படம் ஏன் அவரது ஞாபகத்துக்கு வந்தது? இது போன்ற வேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு இன்னும் சிலவாரங்கள் உங்களுக்கு இருக்கிறது. அதன்பிறகு, உங்களது ஐந்து, ஆறுசேவகர்களை அழைத்து, வேடிக்கை காட்டுங்கள் நிதீஷ்குமார்.

பயிற்சி செய்யுங்கள். திறமையை வளர்த்து கொள்ளுங்கள். நவம்பர் 8ம் தேதிக்குப்பிறகு, அதுபோன்ற வேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவதற்கு உங்களுக்கு அதிகவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, உங்களது வேதனை குறித்து பாடுங்கள். ஒரு வரை விட்டுவிட்டு, மற்றொருவருடன் கூட்டணிசேர்ந்தது குறித்து பாடுங்கள். இவையெல்லாம் குறித்து கவிதை எழுதுங்கள். கண்ணீர்விடுங்கள்.

 தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், மகாகூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. இதனால், பொய்சொல்வது, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம்செய்யும் செயல்களில் அக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

 மந்திரவாதியை சென்று நிதீஷ் குமார் பார்த்த சம்பவமானது, அவரிடையே நம்பிக்கை குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற மாந்திரீகம் அவர்களை காப்பாற்றுமா? அனைத்து பாதைகளும் மூடப்பட்டுவிட்டதாக கருதுவோர்தான், மந்திரவாதிகளை நாடுவார்கள்.

 பிகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தருவேன் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்தவாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனால், பல இடங்களில் பல நாள்களுக்கு பிறகே மின்சாரம் வருகிறது. பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சிக்குவந்தால், 2019-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார் பிரதமர் மோடி.
 

Leave a Reply