பொதுவாக ஏப்ரல் 1 ம தேதியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கே உரிய பாணியில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற முயற்சிப்பர், சிலர் ஏமாற்றியும் விடுவர் , ஒரு சிலர் அந்தா பாம்பு போவுது , சட்டையில் பூரான் என்று அதிர்ச்சி வைத்தியம் தந்து ஏமாற்றுவர் , ஆனால் தமிழக அரசோ தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதன் மூலம் தனது பாணியில் அதிர்ச்சி வைத்தியம் தந்து முட்டாளாகவும் ஆக்கியுள்ளது .

அதாவது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 35 சதவீதம் வரை மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது . இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 ம தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது .

தமிழகத்தில் மொத்தம் 1.80 கோடி வீடுகளுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு தற்போது 6 பிரிவுகளாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக 75 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது, 50 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 75 பைசாவும், 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை 85 பைசாவும் , 101, யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ.1.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

புதிய அறிவிப்பு மூலம் வீட்டு இணைப்புகளுக்கு 100 யூனிட்கள் வரை ரூ.1, எனவும் 100 யூனிட் முதல் 200 யூனிட்கள் வரை ரூ.1.50, எனவும் இரு மாதங்களில் 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 2 ரூபாய் என்றும்; 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் என்றும் 500 யூனிட்டுக்குமேல் உபயோகப்படுத்து வோருக்கு ரூ.5.75 கட்டணமாக வசூலிக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது , அதாவது கிட்டத்தட்ட 35 % வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது,

மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக அவர்களை கேட்க்காமலேயே இலவசங்களை அள்ளித்தந்து அவர்களை சோம்பேறிகளாக ஆக்குவதும், பிறகு இவரகளது தவறான நிதி மேலாண்மையினால் ஏற்ப்படும் சீர்கேடுகளுக்கெல்லாம் அவாகள் தலையில் ஒரேயடியாக சுமையை தூக்கிவைத்து அவர்களை பலிகடாவாககுவதும் எந்த ஊர் நியாயம் ,

மின்சார கட்டணத்தை உயர்த்தியது தவரல்ல ஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக ஓட்டு வங்கி பறிபோய் விடும் என்ற ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து அமைந்த அரசுகள் மின் கட்டணத்தை உயர்த்தாமால் திடீர் என்று அளவுக்கு அதிகமாக் உயர்த்தியதே தவறு ,

உயர்த்தியது என்னவோ தமிழக முதல்வர் ஜெயலிதாவாக இருக்கலாம் இதற்க்கு 80 % பொருப்பு ஏற்க்கவேண்டியது என்னவோ முந்தைய தி.மு.க. அரசுதான் தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை அனல் மின்நிலையங்கள் அவற்றின் செம்மையான செயல்பாடுகளுக்காக 2001- 2002 லிருந்து 2005-2006 வரை பல விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளன . அதுபோலவே தான் மின் வாரியத்திலும் 2005,2006ம் ஆண்டில் ரூ.5000 கோடி அளவுக்கு மட்டுமே கடன் சுமையை வைத்து விட்டு ஜெயலலிதா ஆட்சியை விட்டு இறங்கினார். ஆனால் அதற்க்கு பின் வந்த தி.மு.க. அரசு தங்கள் குடும்பத்தின் நிதி மேலாண்மையை உயர்த்த மேற்கொண்ட முயற்சியில் 20%தை கூட தங்கள் ஆட்சியில் காட்டவில்லை, அதன் விளைவே ஆண்டொன்றுக்கு சராசரியாக 8,000 கோடிக்கும் அதிகமாக வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையேயான நிகர இடைவெளி ஏற்பட்டு, இன்று மின்சார வாரியம் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 45,000 கோடியை தாண்டுகிறது. மின்சார வாரியம் மட்டும்மல்ல ஆவின் பால், ட்ரான்ஸ்போர்ட் போன்றவற்றின் நிலையும் இதுவே.

ஒரு சிறு தேநீர் கடை நடத்துபவர் கூட மூல பொருள்களின் சிறிதளவு விலை ஏற்றதிற்கு தகுந்தபடி சரியான நிதி மேலான்மை செய்து நட்டத்தை தவிர்க்கிறார்கள் , ஆனால் இவர்களோ சுரண்டல், குடும்ப தொழில் பாதிக்காமல் இருக்க அரசு துறையில் விலை ஏற்றத்தை தவிர்த்தனர். ட்ரான்ஸ்போர்ட் , ஆவின், மின்சார வாரியம் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டபோதும் அதனை கவனிக்காமல் கடன் வாங்கி தள்ளினர். இதன் மூலம் அடுத்து வரும் அரசுக்கு கடுமையான நிதி சிக்கலை உருவாக்குவதே இவர்களது தொலை நோக்கு திட்டம், என்ன ஒரு தொலை நோக்கு திட்டம்? மேலும் கடன் வாங்கு வதற்கும் ஒரு காரணத்தை கூறினார், அதுதான் என்ன ? கடன் வாங்காமல் மக்களை சுகமாக வைத்துகொள்ள முடியாது

அது சரியா? சற்று குஜராத்தை பார்ப்போம்

அக்டோபர் மாதம் 2001 ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற போது குஜராத் மாநில மின்வாரியம் வருடத்துக்கு 2246 கோடி நஷ்ட்டத்தில் இயங்கியது , அதில் மற்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடனுக்கான வட்டி மட்டும் 1227 கோடியாகும் , இதை கண்டு நரேந்திர மோடி சற்று அதிர்ச்சியடைந்தார் , தனது குஜராத் கனவு வெற்றியடைய வேண்டுமானால் மின்சாரம் முக்கியம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார் , இருப்பினும் நிதி சுமையை மக்களின் தலையில் வைக்க விரும்ப வில்லை , குஜராத் மாநில மின்வாரித்தில் நிர்வாக சீர் திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்தார்.

முதல் படியாக குஜராத் மாநில மின்வாரியம் நிதி நிறுவனங்களிடம் இருந்து 18 %க்கும் அதிகமான வட்டியில் கடன் வாங்கியிருப்பதை கண்டறிந்தார் , உடனடியக நிதி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வட்டி சதவிதத்தை கணிசமான அளவு குறைத்தார் , இதன் மூலம் ரூ 500 கோடி மிச்சமானது

அடுத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து குஜராத் மின் வாரியத்துக்கு வாங்கும் 1 யூனிட் மின்சாரத்துக்கான தொகை மிகவும் அதிகமாக இருப்பதை கண்டறிந்தார் , எனவே அவர்களுடனான ஒப்பந்தத்தை மறு பரிசிலனை செய்ய முடிவு செய்தார் , இதற்க்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன, இறுப்பினும் அவர்களுடனான 18 மாதகால தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பலன் கிடைத்தது , தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் குறுப்பிட்ட அளவு மின் கட்டணத்தை குறைக்க ஒப்புக்கொண்டன , இதன் மூலம் குஜராத் மின் வாரியத்துக்கு ரூ.675 கோடி மிச்சமானது , ஆக மொத்தம் ரூ.1000 கோடி வரை மிச்சபடுத்தபட்டது,

அதேநேரத்தில் மின்சார திருட்டை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்த விரும்பினார், பொதுவாக மின்சார திருட்டு கிராம புறங்களில் 70 %மும் , நகர் புறங்களில் 20 %மும் இருந்தது , குஜராத் அரசு மின்சர திருட்டை கட்டுப்படுத்துவதற்கு என்றே சிறப்பு சட்டத்தை அமல்படுத்தியது, இதன்படி குஜராத் முழுவதும் மின்சார திருட்டு தடுப்பு காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மின் திருட்டு பெருவாரியாக குறைந்தது .

2003,ம் ஆண்டு மே மாதம் குஜராத் அரசு குஜராத் மின்சார வாரியம் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றியது , இதன் மூலம் குஜராத் மின்சார வாரியம், மின்சார உற்பத்தி நிறுவனம் , மின்சார பகிர்ந்தளிப்பு நிறுவனம் என பிரிக்க பட்டது. இது சிறப்பான நிர்வாகத்துக்கு வழிவகுத்தது ,

கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு என்றே இரண்டு தனி தனி ஃபீடர்கள் உருவாக்கப்பட்டன, வீடுகளுக்கு மின்சாரம் அளிப்பதற்க்கு ஒரு ஃபீடரும் விவசாயத்திற்கு மின்சாரம் அளிப்பதற்க்கு மற்றொரு ஃபீடரும் பயன்படுத்தப்பட்டது. இது தடைய்ற்ற மின்சாரத்துக்கும் மின் சிக்கனத்துக்கும் வழிவகுத்தது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் குஜராத் அரசு ரூ 23000 கோடியை சேமித்தது அதாவது 5000 மெகா வாட்டை சேமித்தது , 24.2 சதவிகிதமாக இருந்த மின் கசிவு, 15 சதவிகிதத்துக்கும் கீழாகக் குறைக்கப்பட்டது (தமிழகத்தில் 2003-2004-ல் 17.6 சதவிகிதமாக இருந்த இந்த மின்கசிவு தற்போது 19 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது).

குஜராத்தை பொறுத்தவரை விவசாயிகள் உட்ப்பட யாருக்கும் இலவசமாக மின்சாரம் வழங்குவதில்லை. வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறவர்களுக்கு மட்டும் மாதகட்டணம் 50 ரூபாய்க்கு மின் இணைப்பு வழங்கபடுகிறது. 'பணத்தை கொடு தரமான மின்சாரம் தருகிறேன்' என்பதே குஜராத்தின் பாலிஸி. மக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் அதையே விரும்புகிறார்கள்.

விவசாயத்துக்கு இலவச மிசாரம் தந்தால்தான் விவசாயம் செழிக்கும் என்ற கருத்தை குஜராத் பொய்ப்பித்துள்ளது ஏனென்றால் குஜராத் விவசாயத் துறையில் 9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது தேசிய அளவிலான சராசரியை விட 3 மடங்கு அதிகமாகும்.

2001 ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற போது 2000 மெகா வாட் மின்சார பற்றாகுறை நிலவியது , இப்போதோ 4000 மெகா வாட் மிகை மின்சாரம் உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் மிகை மின்சாரத்தின் அளவு 7000 மெகா வாட்டாக உயரபோகிறது .ஏற்கெனவே சர்ப்ளஸ் மின்சாரம் இருந்தாலும் மின் உற்பத்தி 'போதும்' என்று நிறுத்தி கொள்ளவில்லை மேலும் மின்உற்பத்தியில் கவனம் செலுத்தியபடியே இருக்கிறது. மின் பற்றாகுறையால் தவித்த மாநிலம் இன்று 16 மாநிலங்களுக்கு தனது உபரி மின்சாரத்தை விற்பனை செய்கிறது.

நரேந்திர மோடியால் தீட்டப்படும் எந்த ஒரு திட்டமும் இன்றைய தேவையை நிறைவு செய்ய மட்டும் தீட்டப்படுவதில்லை. எல்லா திட்டங்களுமே அடுத்த தலைமுறையையும் மனதில் வைத்தே தீட்டப்படுகின்றன. மேலும் நரேந்திர மோடி குஜராத் அரசை பற்றி மட்டுமே கவலைபடுவதில்லை. இந்தியாவின் தேவையையும் மனதில் நிறுத்தியே திட்டங்களை தீட்டுகிறார்

அவர் யாருக்கும் இலவசங்களை தருவதும்மில்லை , இலவசங்களை தருவதற்காக கடன்களையும் வாங்குவதும்மில்லை, ஆனால் குஜராத் மக்கள் சுகமாகதான் வாழ்கிறார்கள்.

எனவே ஒரு அரசாங்கம் தனக்கு ஏற்படும் எல்லா நஷ்டத்தையும் பொது மக்களின் மேல் திணிப்பதே முதலில் தவறு, ஏன் நஷ்டம் ஏற்ப்படுகிறது அதை எவ்வாறு சரி செய்வது என்பதை முதலில் ஆராய வேண்டும், எந்த வகையிலும் நஷ்டத்தை சரிசெய்ய முடியவில்லை என்றால் மட்டுமே, பொதுமக்களிடம் விலை ஏற்றத்தின் மூலம் வசூலிக்கலாம். இதுதான் ஜனநாயக நாட்டின் கோட்பாடு.

ஆனால் நம் தமிழ்நாட்டில் நஷ்டங்கள வரும்போது பொதுமக்கள் மேல்தான் திணிக்கிறார்கள். இது தவறு. தமிழ்நாட்டின் மின் பிரச்னைக்கு முழு காரணம் சரியான நிர்வாகமின்மையே . தமிழ்நாட்டில் மிக பெரிய அளவில் மின்சாரம் திருடப்படுகிறது, திருவிழாக்களுக்கு கொக்கி போட்டு மின்சாரத்தை திருடுவது, தொழிற்ச்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரம் சரியாக கணக்கில் வராதது, தரமற்ற மின் சாதனங்களை உற்பத்தி செய்யவது , கான்க்ரிட் வீடுகள் கூட குடிசையாக கணக்கில் காட்டப்பட்டு இலவச மின்சாரத்தை அனுபவிப்பது, குடிசைகளுக்கு ஒரு பல்ப் மட்டுமே பயன்படுத்த இலவச மின்சாரம என்று சொல்லிவிட்டு, அந்த மின்சாரத்தை கொண்டு பல வீடுகளில் சிறு தொழிற்சாலைகளே இயங்குவது உண்மை … இது போன்ற திருட்டுக்களை யார் கவனிப்பது …. அரசாங்கமா இல்லை மின்சார வாரியமா.

ஆகா மொத்தத்தில் இவர்களுடைய ஊதரிதனமான திட்டங்களினால் பணக்காரன் பணக்கரனாவே வளர்துகொண்டு இருக்கிறான் , ஏழையோ இலவசங்களுக்கு எல்லாம் அடிமையாகி தனது எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கிறான், ஆனால் நடுத்தர வர்க்கத்தின் நிலைதான் திண்டாட்டம் பணக்காரனாகவும் ஆக முடியாமல் ஏழையாகவும் வீழமுடியாமல் தவிக்கிறான். பொதுவாக அரசின் நலத்திட்டங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அந்நிலையிலிருந்து மீண்டு முன்னேற உதவும் ஊன்றுகோலாக இருக்க வேண்டும் ஆனால் நமது அரசாங்கத்தின் நலத்திட்டங்களோ நடுத்தர வர்கத்தின் கையில் இருக்கும் ஊன்றுகோலை பிடுங்கிக்கொண்டு அவர்களை வறுமை கோட்க்கு கீழே தள்ளிகொண்டிருக்கிறது என்பதே உண்மை .

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Tags:

Leave a Reply