20 லட்சம் முதல் 40 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு TRB தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை வழங்க முயன்றது அம்பலம்.

கடந்த செப்டம்பர் 16ம் தேதி (16.09.17) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை (TRB) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அத்தேர்வுக்கான முடிவுகளை நவம்பர் 7 ஆம் தேதி (07.11.17) வெளியிட்டது. 1058 பணியிடங்களுக்காக 2200 பேரை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்திருந்தது.

இந்நிலையில் "உயர் மதிப்பெண் பெற்றவர்கள் " எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை அறிந்து சந்தேகமடைந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மாணவர் தரப்பில்
1. வெளி மாநில மாணவர்கள் 69% இட ஒதுக்கீட்டில் தேர்வாகியிருப்பது
2. வினாத்தாள் – விடைகள் குளறுபடி
3. தேர்வு மதிப்பெண்கள் மோசடி
4. தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் அதிக அளவில் தேர்வாகியிருப்பது பாலிடெக்னிக்கில் பயிலும் தமிழ் மாணவர்களை பாதிக்கும் போன்றவை குற்றச்சாட்டுகளாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று (11.12.17) பழைய தேர்வு முடிவுகளை திரும்பப்பெற்ற ( TRB ) ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய OMR மதிப்பெண்களை வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் TRB யின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பாணை (CV List) யில் உள்ளவர்களின் பழைய மதிப்பெண்களை புதியதாக வெளியிடப்பட்ட மதிப்பெண்களுடன் சரிபார்த்த போது தேர்வானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

54 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 146 மதிப்பெண்களும் 60 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 149 மதிப்பெண்களும் போலியாக போட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர்.

இதே போல் இயந்திரவியல் துறையில் 50 மேற்பட்டோரும், மின்னணுவியல் துறையில் 40 மேற்பட்டோரும் கணினி அறிவியல் துறையில் 30க்கும் அதிகமானோரும் இதர துறைகளில் கணிசமாகவும் போலி மதிப்பெண்களை போட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் 20 முதல் 40 லட்சங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

பல ஆண்டுகளாக கடினப்பட்டு படித்து வேலை கிடைக்கும் எதிர்பார்ப்பில் மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலின் உச்ச கட்டமாக தமிழ்நாடு உள்ளது.

Leave a Reply