திரிபுரா  திரிபுரசுந்தரி ஆலயம்இந்தியாவின் கிழக்குப் பகுதியான திரிபுரா மானிலத்தில் உள்ளது ஒரு அழகிய திரிபுரசுந்தரி ஆலயம் . அதில் உள்ள தேவியை ஷோராஷி என்றும் கூறுகின்றனர் . உலகில் உள்ள ஐம்பத்தி யொரு சக்தி ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும் . அகர்தலாவில் இருந்து 58 கிலோ மீ ட் டர் தொலைவிலும் , திரிபுராவில் உள்ள உதயபூரில் (ராஜஸ்தானில் உள்ள உதயபூர் அல்ல) இருந்து 3

கிலோ மீ ட் டர் தொலைவிலும் உள்ளது இது. முதலாம் நூற்றாண்டில் கட்டபபட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மின்னல் தாக்கி பழுதடைய அதை அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னன்

மீண்டும் புதுப்பித்தான் .

திரிபுர சுந்தரி பற்றி பல கதைகள் உள்ளன. ஆனால் சௌந்தர்யல ஹரியில் காணப்படும் திரிபுரசுந்தரியுடன் ஒத்துப் போகவில்லை. இந்த ஆலயத்தினைப் பொறுத்தவரை கூறப்படும் கதை இது. " தஷ்ய யாகத்தில் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் போன சிவபெருமான் தன் இறந்து போன மனைவியை தோளில் தூக்கிக் கொண்டு ஆடிக் கொண்டு போன பொழுது விஷ்ணுவானவர் அவள் உடலைதன் சுதர்சன சக்கிரத்தினை ஏவி வெட்டிவிட அது 51 துண்டுகளாகி பல்வேறு இடங்களில் விழுந்த பொழுது இப்போது திரிபுராவில் ஆலயம் உள்ள மாதாபுரி எனும் இடத்தில் வலதுகால் விரல் விழ அது சக்தி பீடமாயிற்று".

அந்த ஆலயம் ஆமையைப் போன்ற அமைப்பில் எழுந்துள்ளதால் அதை கூர்மஸ்தான் எனவும் அழைக்கின்றனர் . பொதுவாக திரிபுரசுந்தரி மிகவும் அழகானவள் . என்றும் இளமைதரும் பதினாறு வயதானவள் . ஆனால் ஆலயத்தின் உள்ளே உள்ளது காளி உருவிலான சிலை. அதுவும் இரு சிலைகள் முறையே இரண்டடி உயரத்திலும் , ஐந்தடி உயரத்திலும் உள்ளன. ஓன்றை சிறியவள் எனவும் மற்றதை பெரியவள் எனவும் அழைக்கின்றனா . சிறிய சிலையை முன் காலத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பொழுதும் , யத்தத்தின் பொழுதும் தங்களுடன் அந்த நாட்டு மன்னர்கள் எடுத்துச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது.

திரிபுரசுந்தரி பற்றி உள்ள பல கதைகளில் சில பண்டிதர்கள் கூறிய ஒரு கதை இது. முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்ற அரக்கன் இருந்தான் . அவனுக்கு மூன்று குணங்களைக் – ரஜஸ் , தமஸ் , சத்வ, -குறிக்கும் வகையில் மூன்று புதல்வர்கள் இருந்தனர் . அவர்கள் சிவபெருமானிடம் தம்மை அழிக்க முடியாத வரத்தைக் கேட்டுப் பெற்று பறக்கும் தங்க, வெள்ளி, இரும்பிலான மூன்று நகர்களை உருவாக்கி, அதில் இருந்தபடி தேவர்களை துன்பப்படுத்தி வந்தனர் . அவன் கொடுமைகளை சிவபெருமானிடம் சென்று தேவர்கள் எடுத்துக் கூறிய பொழுது அவர்கள் மூவரையும் சிவபெருமான் அழித்தார் .

அந்த மூன்று குணங்களைக் கொண்ட அசுரர்களை அழித்தவரை மணந்ததினாலும் , மூன்று உலகிலும் – தங்க, வெள்ளி, இரும்பிலான மூன்று உலகையும் சேர்த்து – அவள் அழகுக்கு நிகரானவள் எவரும் இல்லை என்ப தினாலும்; திரிபுரசுந்தரி ( திரிபுர என்றா ல் மூன் று) என்ற ரூபத்தை அடைந்து இங்கு குடி கொண்டுள்ளாள். இன்னொரு விளக்கத்தின்படி மூன்று குணங்களை அழித்தவருடைய மனைவி என்பதினால் திரிபுரசுந்தரி என்பவள் மூன்று குணங்களுடன் கூடிய அதி சுந்தரமான அழகைப் பெற்றவள் என்ற பெயர் ஏற்பட்டது.

இது புதிய செய்தியாக இருந்தது. ஆமாம் திரிபுரசுந் தரி ஆலயத்தில் எப்படி காளி தேவி சிலையாக இருக்க முடியும் என வினவிய பொழுது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பத்திரகாளி கோவிலில் பத்ரகாளியை மந்திரங்களினால் உருயேற்றி மிக அழகிய ரூபத்தில் மெருகேற்றி திரிபுரசுந்தரியாக பூஜிப்பதாக கூறினர் . அது உண்மை எனில் மிகவும் வியப்பான செய்தியே!

திரிபுரசுந்தரி ஏன் அவதாரம் எடுத்தாள்? ஒரு கிராமியக் கதையின்படி சிவபெருமானுடைய கவனத்தை கலைத்த காமனை அவர் எரித்தவுடன் அந்த சாம்பலை எடுத்த தேவர்கள் அது மீண்டும் மன்மதனாகட்டும் என நினைத்து ஒரு உருவம் தந்தனர் . ஆனால் அவர்கள் எதிர் பார்பிற்கு மாறுதலாக அந்த உருவம் ஒரு பயங்கரமான அசுரனாயிற்று. அவன் சிவபெருமானிடம் சென்று பல வரங்களைப் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். அவன் சிவபெருமானுடைய ஆசியை பெற்று இருந்ததினால் அவனை அழிக்க முடியாமல் போன தேவர்கள் சிவபெருமானையே வேண்ட அவர் தன்னுடைய மூன்று குணங்களை கொண்டு காளியின் அவதாரமான திரிபுரசுந்தரியை படைக்க அவள் அந்த அசுரனை வதம் செய்தாளாம் .

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply