உலகின் தலை சிறந்த மனிதர்கள் குறித்து உலகபொருளாதார மன்றம் (டபிள்யூ.இ.எப்.) கருத்துகணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

உலகின் 125 நாடுகளிலிருந்து, 20-30 வயதுக்கு உட்பட்ட 1,084 இளைஞர் களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்முடிவில், 12.4 சதவீத வாக்குகளை பெற்ற மகாத்மா காந்தியடிகள் 4வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி 3 சதவீத வாக்குளைபெற்று “டாப்-10ல்” 10வது இடத்தை பிடித்துள்ளார்.

இதில் 20.1 சதவீத வாக்குகளுடன் மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா முதலிடத்தை பிடித்துள்ளார்.

போப்பிரான்சிஸ் 2ம் இடத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 5ம் இடத்தையும், அமெரிக்க அதிபர் ஒபாமா 7வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Leave a Reply