கடந்த ஜனவரி 27 ம் தேதி , அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் இரண்டு பாகிஸ்தானியரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார், இதை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆயுதங்களுடன் வந்த இருவரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற

அச்சத்தின் காரணமாக தற்காப்புக்காக சுட்டதாக அமெரிக்க உள்துறை-அமைச்சக அதிகாரி விளக்கமளித்தார் .

இந்நிலையில் ரேமண்டை விடுதலை செய்யவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது . இதற்கு பாகிஸ்தான் ஒப்பு கொள்ளவில்லை. அவரை தங்கள் நாட்டின் சட்டப்படி-தான் விசாரிப்போம் என பதில் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ரேமண்டை விடுதலை செய்யும்வரை அந்த நாட்டுடனான அனைத்து-முக்கிய நிகழ்வுகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்த முடிவால், பாக். அதிபரின் அமெரிக்க பயணம், அமெரிக்கா -பாகிஸ்தான். இடையேயான பேச்சுவார்த்தை, ஆகியவை பாதிக்கப்படும் என தெரியவருகிறது .

{qtube vid:=n8Cp-qDjWik}

Leave a Reply