ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் சட்ட விதி மீறல்கள் நடந்துள்ளது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்க-வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கைய நாயுடு வலியுறுத்தினார் .

வெங்கைய நாயுடு இன்று தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு வருகை தந்தார் மூத்த கட்சி

நிர்வாகிகளிடம் கட்சி பணி மற்றும் வரவிருக்கும் தமிழக சட்ட சபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார் .

பிறகு அவர் நிருபர்களிடம் பேசியதாவது : ஊழல்-கண்காணிப்பு ஆணையர் தாமஸ் நியமிக்கப்பட்டது தொடர்பாக நடந்த சட்டமீறல்கள் குறித்து பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக பார்லி. கூட்டு குழு முன்பாக ஆஜராக-வேண்டும். ஊழல் நடவடிக்கை காரணமாக மத்தியஅரசு மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply