மம்தா ஆட்சி நடக்கும் மேற்குவங்க மாநிலத்தில் சீட்டு நிறுவனங்கள் தான் வளருகின்றன. தேச விரோத சக்திகளுக்கு பாதுகாப்பான இடமாக மேற்கு வங்கம் ஆகிவிட்டது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது.

சாரதா மற்றும் ரோஸ்வாலி சிட் பண்ட் நிறுவனங்களில் 17லட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். அந்தபணம் எங்கே சென்றது. மேற்கு வங்கத்தில் அனைத்து தொழிற் சாலைகளும் மூடப்படுகின்றன. ஒரு தொழில்மட்டும் செழித்துவளருகிறது. அந்த தொழில் சீட்டு நிதி நிறுவனதொழில் .. மம்தா பானர்ஜியை மக்கள் முதல்வர் என்று தான் அறிவார்கள். ஆனால் சீட்டு நிதிதொழிலதிபர்கள் மம்தாவை சிறந்த ஓவியராக அறிந்திருக்கிறார்கள்.

மம்தாவின் ஓவியங்களை  சீட்டு நிதி நிறுவன அதிபர்கள் கோடிகணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். மக்கள்கள் முட்டாள்கள் அல்ல. திரிணாமுல் காங்கிரசின் ஆதரவுடன் தான் சீட்டு நிறுவனங்கள் நடக்கின்றன என்பதை அவர்கள் அறிவார்கள்.

மேற்கு வங்கத்தில் வாக்குவங்கி அரசியல் தற்போது தேசவிரோத சக்திகளின் கூடாரமாக ஆகிவிட்டது. மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடப்பதன் மூலம் தேசவிரோத சக்திகள் இருப்பதை அறியமுடிகிறது. கள்ளநோட்டுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்குகின்றன. வாக்குவங்கி அரசியலுக்காக மாநில எல்லை வழியாக நடக்கும் ஊடுருவல் மம்தா அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. மால்டாவில் வன்முறை வெடித்துள்ளது. மம்தா அரசின் நிர்வாக குறைபாடு காரணமாக அந்தவன்முறை வெடித்தது.  மால்டா வன்முறை குறித்து நாடுமுழுவதும் கவலைபட்டது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எல்லை பாதுகாப்பு படை யினருக்கும் உள்ளூர் மக்களுக்கும்  இடையே நடந்தமோதல் என்று கூறுகிறார்.

இது உண்மையல்ல. மால்டாவில் போலீஸ்நிலையம் தாக்கப்பட்டது. போலீஸ் வாகனம் எரிக்கப்பட்டது.போலீசார் நம்பிக்கை இழந்தார்கள். மம்தாபானர்ஜி மாநிலம் முழுவதற்கும் முதல்வரா? அல்லது குண்டர்களுக்கு மட்டும் தலைவரா?.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நேற்று பாஜக பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியது

Leave a Reply