கடந்த 1960 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சில நாடுகள் ஒரு நிர்வாக_முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தின . அந்த முறையானது ஊழல் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிவகை செய்தது . இந்தியாவில் 1966ஆம் ஆண்டு அமைக்கபட்டட நிர்வாக மறுசீறமைப்புக்குழு அரசுக்கு இரு பரிந்துரைகளை வழங்கியதுஅதுதான்

1. லோக்பால் (மத்திய அரசுக்கும்)
2. லோக் யுக்தா (மாநில அரசுக்கு).

இந்த லோக்பால் சட்டத்தை இந்திய நாடாளுமன்றதில் சட்டமாக்க கடந்த 1971முதல் 2008 வரை 8 முறை முயற்சிசெய்தும் நிறைவேற்றபடாமல் போய்விட்டது.

இந்தியாவில் நீதித்துறை மற்றும் தேர்தல்ஆணையம் ஆகிய இரண்டும் ஒரு சுதந்திரமான அமைப்புகளாகும். இந்த இரு துறைகளிலும் அரசு தலையிட முடியா வண்ணம் இந்திய அரசியல் சாசனம் அமைக்கபட்டுள்ளது. அது போன்று ஊழலுக்கு எதிராக அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட ஒரு அமைப்பு தேவை இதுவே லோக்பால் மசோதா.

இந்த லோக்பால்_மசோதாவில் பொதுமக்கள் இடம் பெருவர் அவர்களே சம்மந்தபட்ட அதிகாரிகளையும் , அரசியல்வாதிகளையும் விசாரிக்கும் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார் . ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து பொது மக்களும் அரசும் இடம்பெரும் வகையில் தற்பொது லோக்பால் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமரையும், நீதிமன்றங்களையும், இந்த வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பு வழியுறுத்தி வருகிறது.

தற்போது அரசுக்கு பரிசீலிக்கபட்ட லோக்பால் சட்டம் மிக பலவீனமானது. இதன் படி உருவாக்கபடும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரம மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு_ஆணையங்கள் லோக்பால் தொடர்பாக செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்திற்கு வலிமையூட்டும் வகையில், அன்னா_ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர்குழு, மாதிரி மசோதா தயார்செய்திருந்தது. அந்த மாதிரி மசோதா அடிப்படையில் புதியலோக்பால் சட்டம் இயற்றபட வேண்டும் என அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்

 

Tags; லோக்பால் மசோதா என்றால் என்ன, லோக்பால் சட்டம் , லோக் யுக்தா, அமைப்பு தேவை இதுவே லோக்பால் மசோதா

Leave a Reply