சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.அவர் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர் அல்லர்.அவருக்கு தாயாகிற பேறு
ஒரு பெண்மணிக்குக் கிடைத்தது. அவர்தான் காரைக்கால் அம்மையார்.

ஆண்டவனை வணங்கி வழிபாடு செய்ய ஆழகான பெண் வடிவம் இடையூறாக இருக்கும் என்று பேய் வடிவம் வேண்டிப் பெற்றவர்.அவர் எம்பெருமான் வீற்றிருக்கும் கைலாய மலையை அடைந்தபோது அதைக் காலால் மிதிக்க அஞ்சினார்.எனவே தலைகீழாக நீன்று எறத்
தொடங்கினார்.அப்போது உம்மையம்மை சிவபெருமானிடம் 'தலையால்
நடந்து வரும் இந்த எழும்பு உருவம் யார் 'என்று கேட்டார்.அம்மையாரின் தன்னலமற்ற அன்புப் பெருக்கிலே திளைத்த
பரமசிவம் 'வருபவள் நம்மைப் பேணும் அம்மை காண்'என்று மொழிந்து மகிழ்ந்தார்.ஆகவே காரைக்கால் அம்மை ஆண்டவனுக்கே அம்மையாக , அன்னையாக ஆனார்.

Tags:

Leave a Reply