காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார.

ஜெகன் மோகன் ரெட்டியின் கோரிக்கைக்கு ஆதரவு-தெரிவித்து 20 காங்கிரஸ் எம் எல் ஏக்கள், சிரஞ்சீவி கட்சியின் 2 எம் எல் ஏ.க்கள், தெலுங்கு தேச

கட்சியின் பால்நாகாரெட்டி, பிரசன்ன-குமார் ஆகியோர் இந்த உண்ணா விரதத்தில் கலந்து-கொண்டனர,

ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில் காங்கிரசில்லிருந்து எனது ஆதரவு எம்எல்ஏக்கள் விலகி வர வேண்டாம் என கூறியுள்ளேன். அவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தான் நீடிக்கின்றனர். நான்-நினைத்தால் ஆந்திர அரசாங்கம் கவிழும். ஆனால், நான் ஜென்டில்மேன் என்பதால் அரசை கவிழ்க்கவில்லை. எனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் அடுத்த சட்டபேரவை தேர்தலில் எனது கட்சியின் சார்பாக போட்டியிடுவார்கள்’ என்றார்.

ஆந்திர சட்டபேரவையில் மொத்தம் உள்ள 294 எம்எல்ஏ.க்களில் காங்கிரசுக்கு 155 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 20 எம்எல்ஏ.க்கள் விலகி சென்று விட்டால், ஆளும்கட்சியின் பலம் 135 ஆக குறைந்துவிடும் . இது பெரும்பான்மையை விட 13 எம்எல்ஏ.க்கள் குறைவு என்பதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்படும்

{qtube vid:=sGjsTqEX1o4}

Leave a Reply