ஆப்கானில் சல்மா அணைக் கட்டை திறந்து வைக்கும் மோடி

அமெரிக்க அதிபராக தொடர்ந்து 2.,வது முறை பொறுப்புவகிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டின் இறுதியில் அப்பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். அதற்குமுன்னதாக உலகின் முக்கிய நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அவர் பிரியாவிடைவிருந்து அளிக்கிறார்.

இந்தவிருந்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் ஏழாம் தேதி வாஷிங்டன் நகருக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக கத்தார், சுவிட்ஸர்லாந்து மற்றும் மெக்சிகோ நாட்டிலும் அவர் சுற்றுப் பயணம் செய்கிறார்.

இதற்கிடையில், வரும் ஜுன் 4-ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டுக்குசெல்லும் மோடி, அங்கு ஹெரட் மாகாணத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள சல்மா அணைக் கட்டை திறந்துவைத்து,  அந்நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்கிறார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நாடுகளுக் கிடையில் நிலவும் நட்புறவின் அடையாளமாக 20 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோ மீட்டர் அகலத்தில் தற்போது தரமுயர்த்தி கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் மூலம் 42 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனவசதியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவால் கட்டித்தரப்பட்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்துவைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...