பூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு. ஆனால் அதன் சகுனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர் . பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி செல்ல வேண்டாம் என்று ஒரு நம்பிக்கை இன்றும் உண்டு. பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர் .
இதற்கு ஒரு அர்த்தம் கொண்டு நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆறாவது உணர்வும் செயல்படும் ஒரு பிராணி பூனை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூனை ஓடி வரும் திசைக்குச் செல்ல வேண்டாம் என்றே ஆதிகாலத்தில் கூறியிருக்கிறார்கள். பூனை ஒரு சாதுவான விலங்கு அது அதைவிட பெரிய விலங்குகளை (அதன் எதிரியை) பார்த்து அதன் திசையை மாற்றும் அதனால் நம் முன்னோர்கள் பூனை ஓடி வரும் திசையில் நாம் சென்றால் அந்த விலங்குகளால் நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரும் என்ற அர்த்தத்தில் அந்த திசையில் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர் .
இதைக்காலப்போக்கில் வலது , இடது என்ற அலங்கரங்களுடன் சகுன விதிய அமைத்து மாற்றி பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது
நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர். நமது முன்னோர்கள் கூறியுள்ள அனைத்துக்கும் நிச்சயம் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. பூனை குறுக்கே வருவது அபசகுணம் அல்ல. முன்னோர்கள் கூறியது பிற்காலத்தில் மூடநம்பிக்கையாக மாற்றப்பட்டுவிட்டது
Tags; பூனை குறுக்கே, பூனை சகுணம்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.