நாடி சுத்தி பயிற்சி

 தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.

நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் ‘டி’ சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.

நன்றி : பானுகுமார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...