அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

 இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாக படர்ந்து காணப்படும். இந்த இரண்டுகொடிகளின் மருத்துவ குணம் ஒன்றுதான். இதனை அம்மான் பச்சரிசிச் கொடி இலை என்றும். எம்பெருமான் பச்சரிசி என்றும் அழைப்பார்கள்.

 

அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து, தினமும் பகல் சாதத்துடன் சேர்த்து ஏழுநாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணும், வாய்ப் புண்ணும் ஆறும்.

அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டுவந்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து சிறுநெல்லிக்காய் அளவு எடுத்து ஒருடம்ளர் அளவு மோரில் கலந்து காலையில் மட்டும் உள்ளுக்குக் கொடுத்து விடவேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு நின்றுவிடும்.(இந்த மூன்று நாட்களும் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும் மேலும் காபி, தேநீர் சாப்பிடக்கூடாது).

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சீழா நெல்லி இலையையும் சம அளவுசேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இருவேளை என்று தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

வயதானவர்களுக்கு இரவில் இருமல் ஏற்படும். இதனால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இதைக் குணப்படுத்த அம்மான் பச்சரிசியிலையைக் கசக்கிச் சாறு பிழிந்து வடிகட்டி நான்கு தேக்கரண்டியளவு சாறு எடுத்து, தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஓயாத இருமல் ஜலதோஷம் குணமாகும்.

அம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை,
அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசி , அம்மான் பச்சரிசியின்  மருத்துவ குணங்கள், அம்மான் பச்சரிசியின்  பயன்கள் , அம்மான் பச்சரிசியின்  நன்மை, மருத்துவ குணம், பயன் , அம்மான் பச்சரிசியின்  நன்மைகள், அம்மான் பச்சரிசியின்  பயன், அம்மான் பச்சரிசி மூலிகை , இலை, ராசம் , அம்மான் பச்சரிசியின் இலையினை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...