சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (64), தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனிவார்டுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட சுஷ்மாஸ்வராஜ் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 7-ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க பல்வேறுதரப்பினர் முன்வந்த நிலையில், நேரடியாக அவருக்கு குடும்பத்தைச் சாராத ஒருபெண் சிறுநீரகத்தை அளித்தார்.இதைத் தொடர்ந்து சுஷ்மாவுக்கு கடந்த 10-ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுஷ்மா, செவ்வாய்க்கிழமை தனிவார்டுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.சி. மிஸ்ரா தெரிவித்ததாவது: அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள அமைச்சர் சுஷ்மாவின் உடல்நிலையை எங்கள் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 3 நாள்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலைக்கேற்ப, அடுத்த 7 முதல் 10 தினங்களுக்குள் வீடுதிரும்புவார். அதேவேளையில், அமைச்சருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கியபெண்ணும் வீடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மிஸ்ரா
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.