ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரிப்போர்ட்கார்டை தாக்கல்செய்ய வேண்டும்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பணிசெயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்கார்டை ஆன்லைன் மூலம் அரசிடம் தாக்கல்செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

இதன் மூலம் அதிகாரிகளின் பணிசெயல்பாடு விகிதம், நம்பகத்தன்மை ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவும் என அரசு கருதுகிறது. அவ்வாறு தாக்கல்செய்யப்படும் ரிப்போர்ட் கார்டுகள் மீது அரசு அலுவலர்கள், அரசியல் பிரதிநிதிகள் தங்களின் விமர்சனங்களை, எலக்ட்ரானிக் முறையில் பதிவிடமும் வழிவகைசெய்யப்பட உள்ளது.

தற்போது பரிசீலனையில் இருக்கும் இந்தவிதிமுறைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இந்தவிதிமுறை நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ல் தங்களின் ரிப்போர்ட்கார்டுகளை அரசிடம் தாக்கல் செய்யவேண்டும்.


அதிகாரிகள் தாக்கல்செய்யும் ரிப்போர்டு கார்டுகளை சரிபார்த்து, அதுபற்றிய விமர்சனங்களை மார்ச் 15 ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் பயிற்சித் துறை கடிதம் அனுப்பி உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...