2.95 கோடி வீடுகளைக்கட்ட இலக்கு

பிரதான் மந்திரி ஆவாஸ் ஜோஜ்னா எனும் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் (PMAY) வீட்டுக்கான தொகையை உயர்த்தும் யோசனை அரசிடம்இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை நாடாளுமன்ற மக்களவையில் இன்று ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்தபதிலில் தெரிவித்தார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ”பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் (PMAY-G) கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளின் பட்டியலை புதுப்பிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை அதிகரிக்க அரசாங்கத்திடம் ஏதேனும்திட்டம் உள்ளதா? அனைவருக்கும் வீடு என்னும் இலக்கைஅடைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த எழுத்துப் பூர்வமான பதில்: “தற்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானத்தொகையை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை.

கிராமப்புறங்களில் “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கைஅடைய, ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAYG) திட்டத்தை ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைப்படுத்துகிறது. மார்ச், 2024க்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி வீடுகளைக்கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PMAY-Gஇன் கீழ் பயனாளிகளை அடையாளம் காண்பது, சமூகப்பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு (எஸ்ஈசிசி) 2011இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வீட்டுவசதிகள் மற்றும் விலக்கு அளவுகோல்களின் அடிப்படையில் மற்றும் உரிய சரிபார்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கிராம சபைகள் மற்றும் மேல்முறையீட்டு செயல்முறையை நிறைவு செய்தல் என்ற அடிப்படையில் 2.95 கோடிவீடுகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எஸ்ஈசிசி தரவுத்தளத்தின் மூலம் கிடைக்கும் தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 2.15 கோடியாக உள்ளது.

2011 எஸ்ஈசிசியின் கீழ் விடுபட்டதாகக் கூறப்படும் பயனாளிகளை அடையாளம் காண, ஜனவரி 2018 முதல் மார்ச் 2019 வரை அரசாங்கம் ஆவாஸ்+ கணக்கெடுப்பை நடத்தியது. 80 லட்சம்பேர் புதிதாக கண்டறியப்பட்டனர். அந்த இடைவெளியை நிரப்ப, ஆவாஸ் தரவு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் 63.68 லட்சம் வீடுகள்தகுதியுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆவாஸ் திட்டத்தில் இன்று வரை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளன.

‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைய அமைச்சகம் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது: 1. அமைச்சக மட்டத்தில் முன்னேற்றம் பற்றிய வழக்கமான ஆய்வு, 2. திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கென PMAY-G டாஷ்போர்டின் தொடக்கம் 3. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இலக்குகளை சரியானநேரத்தில் ஒதுக்கீடு செய்தல் மற்றும் போதுமான நிதியைவிடுவித்தல், 4. பணி முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக மாநிலங்களுடன் வழக்கமான பின் தொடர்தல், மத்திய மற்றும் மாநில பங்கு, மற்றும் கிராமப்புறங்களில் நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம்வழங்குதல். 5.செயல்திறன் குறியீட்டு டேஷ்போர்டின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்குதல்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் ஊக்கம்  உருவாக்கபடுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...