நாட்டின் அமைதி , வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு நம் வீரர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்

 நேற்று இந்தியாவின் 125 கோடி நாட்டுமக்களும், பராக்கிரம் பர்வ் என்ற வீரத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடினார்கள்.  நாம் 2016ஆம் ஆண்டில் நடந்த துல்லிய தாக்குதல் நினைவு கூரப்பட்டது; நமது தேசத்தின் மீது தீவிரவாத போர்வையில் கோரமாக நடத்தப்பட்ட மறைமுக போருக்கு நமது இராணுவத்தினர் பலமான பதிலடி கொடுத்தார்கள்.  நாட்டின் குடிமக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு நமதுசக்தி என்ன என்பதைத் தெரியப்படுத்தும் வகையில், நாட்டில் பல்வேறு இடங்களில் நமது இராணுவத்தினர் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து இரண்டாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடக்கும், பராக்கிரம பார்வ் நிகழ்ச்சி பெரியவெற்றி பெற்றுள்ளது, இந்த நிகழ்ச்சி, நமது ராணுவத்தின் பெருமிதத்தை இளைஞர்கள் அறிந்துகொள்ள உதவியுள்ளது. 

உலகின் அமைதிக்காக நமது ராணுவம் பணியாற்றி வருகிறது ராணுவ வீரர்களின் துணிச்சலை எண்ணி நாட்டுமக்கள் பெருமை கொள்கின்றனர், பயங்கரவாதிகள் உதவியுடன் நடந்த நிழல் யுத்தத்துக்கு நமதுவீரர்கள் அளித்த பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். 

அமைதியின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா அமைதிப்பாதையை முன்னெடுத்து செல்லவே விரும்புகிறது. எந்த நாட்டின் நிலப்பரப்பையும் அபகரிக்கும் தீமையான நோக்கமோ, பார்வையோ நமக்குகிடையாது. இதுவே, சமாதானம் மற்றும் அமைதிக்கான இந்தியாவின் தீர்மானமான நிலைப் பாட்டாக உள்ளது.

நமது நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு ராணுவவீரர்கள், எப்போதும் உரிய பதிலடி கொடுப்பார்கள் , பேரிடர் நேரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானபடை வீரர்கள் முன்னால் வந்து நின்று ஒவ்வொரு முறையும் நாட்டை காத்து வருகிறார்கள் . 

தூய்மையே சேவை திட்டம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது, நாட்டையே மாற்றியுள்ள இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

காந்தி ஜெயந்தி, இந்தியாவுக்கு முக்கியமான நாளாகும். அவரால் தேசம் ஈர்க்கப் பட்டுள்ளது மகாத்மாவின் கொள்கைகள் இந்தியாவளர உதவுகிறது. நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காந்தி, சுதந்திரத்திற்காக நடந்த அனைத்து விதமான போராட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் மக்களுக்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளார். அவர் தேசத்துக்கு ஆற்றிய பணியை மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். காந்தி அளித்த போதனைகள் இன்றைய காலகட்டத்துக்கும் ஏற்றதாக உள்ளது .

எதற்காகவும் நாட்டின் இறையாண்மையையும், சுயமரியாதையும் விலையாக தரக்கூடிய சமாதானத்தை இந்தியா விரும்பவில்லை என தெரிவித்தார்.

மான் கி பாத்’  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது.,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...