வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும்

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக்கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் . அதேசமயத்தில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதையும், பலமில்லியன் பேருக்கு உணவு மற்றும் சத்துகள் கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியவர், பருவநிலை மாறுதலை தாக்குபிடிக்கக்கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்தன்மை, பூச்சிகள், நோய்களை தாங்கும்வகையில் அவை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்துகொள்ளும் பயிர்களை உருவாக்கினால்தான், இந்திய வேளாண்மையின் தாக்குபிடிக்கும் திறன் அதிகரித்து, நீடித்த வளர்ச்சி பெறுவதாக இருக்கும் என்றார் அவர்.

வேளாண்மை மற்றும் உணவுதுறையில் வரும் தசாப்தங்களில் பருவநிலை மாறுதலால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த  நாயுடு, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சூழலைக்குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நீர்நிலைகளில் மாசுஅதிகரித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகள்பற்றி கவலை தெரிவித்தவர், பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய, வறட்சியைத் தாங்கக் கூடிய மரபணு மாற்றம் செய்தபயிர்களும், தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களும் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் உள்ளது. விவசாயம்தான் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்று கூறியவர், நமது கலாச்சாரம், நாகரிகத்தில் பிணைந்த அம்சமாக விவசாயம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். “நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்கு இன்னும் விவசாயத்தைதான் சார்ந்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

“விவசாயிகளின் வருமானத்தைப்பெருக்க, நாம் உற்பத்தியைப் பெருக்கவும், வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர்மதிப்பு பயிர்கள் சாகுபடி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் யோசனை தெரிவித்தார். விவசாயிகளுக்கு லாபகரமான விலைகள் கிடைப்பதை தொடர்புடைய துறையினர் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நல்ல சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் வசதிகள் செய்துதருதல், இடுபொருள்கள் கிடைக்கச்செய்தல், கடன் வசதி அளித்தல், சந்தைப்படுத்தலுக்கு நல்ல ஏற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால்தான் இது சாத்தியம் என்றார் அவர்.

பெருந்தொற்று காலத்தில் இணையற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடுகளுக்காக விவசாயிகளைப் புகழ்ந்த  நாயுடு, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்களையும் மீறி விவசாய துறைதான் சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார். காரிப்பருவத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விளைச்சல்பரப்பு 59 லட்சம் ஹெக்டர் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். முடக்கநிலை காலத்திலும் விதைகள், உரங்கள், கடன்வசதி ஆகியவை உரியகாலத்தில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ததே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

சமீப ஆண்டுகளில் வேளாண்மை துறைக்குப் புத்துயிரூட்ட அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தவர், கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் இப்போது கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார். பிரதமரின் கிசான்சம்மான் நிதித்திட்டத்தை அமல் செய்ததால், இந்திய விவசாயிகளில் 72 சதவீதம் பேர் பயன்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

CRISPR-Cas9 மரபணு மாற்றுதல் போன்ற புதியதொழில் நுட்பங்களின் பயன்களைக் குறிப்பிட்ட  நாயுடு, தேவைகளுக்கு ஏற்ப இயந்திரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். “மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி 30 சதவீதளவுக்கு அதிகரிக்கும், சாகுபடிசெலவு 20 சதவீதம்வரை குறையும்” என்றார் அவர்.

நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் அதைச்சார்ந்த துறைகளில் தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், உற்பத்தியை அதிகரிப்பதற்கு புதிய உயர்விளைச்சல் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொள்வதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைக் கழகத்தில் பட்டம்பெற்று செல்பவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த நீடித்த பயன்தரக்கூடிய வேளாண்மை மேம்பாட்டை உருவாக்கி, விவசாயிகளுக்கு நல்லவருமானம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். நாட்டின் பலமில்லியன் பேருக்கு உணவு, சத்து ஆகியவை போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். “உங்களுடைய ஆராய்ச்சி சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பருவநிலை மாறுதல், ஆரோக்கிய பிரச்சினைகள் என மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிறப்பின் அடிப்படையில் திமுக த ...

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார் குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...