இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக் கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.
பான்காங் ஏரி அருகே பிங்கர் 4 பகுதியில் இருந்து நமது ராணுவம் விலக்கி கொள்ளபட்டது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம்தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார். பிங்கர்-4 பகுதி நமது மலைப்பகுதி. இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில்இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பகுதியை சீனருக்கு ஏன் மோடி கொடுத்தார்? இந்த இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிகொண்டது ஏன்?
எல்லைகளை காக்க நமது ராணுவம், விமானப்படை, கடற்படை தயாராக உள்ளது. இந்திய படைகள் கைப்பற்றிய பகுதியை, சீனாவிற்கு பிரதமர் கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சனை நிலவிவருகிறது. தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துவருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார். சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாகசெயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், முக்கிய மலைஉச்சியை சீனாவிடம் இந்தியா விட்டுக் கொடுத்துவிட்டதாக ராகுல் கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இந்தியபகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும். யார் தேசபக்தர், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்கு நன்றாகதெரியும் என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |