எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்து, இரண்டு சங்களவு எடுத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சங்களவு கொடுத்து வந்தால் விஷம் முறிந்துவிடும். விஷத்தால் ஏற்பட இருந்த விபத்து நீங்கிவிடும்.
துளசி வேரை சுத்தம் செய்து, மைபோல அரைத்து கோலிக் குண்டளவு எடுத்து, ஒரு வெற்றிலையில் வைத்து, நன்றாக மென்று விழுங்கி விட்டால் இரத்தத்துடன் போகும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
துளசி இலையில் கொஞ்சம் எடுத்து வந்து நைத்து சாறு எடுத்து, வலியுள்ள காதில் இரண்டு துளி விட்டு பஞ்சை அடைத்து விட்டால் காது குத்துவலி குணமாகும்.
ஒரு வெற்றிலையை எடுத்து அதில் தேக்கரண்டியளவு சர்க்கரையைக் கொட்டி, 10 துளியளவு துளசிச் சாற்றைக் கலந்து, வெற்றிலையை மடித்து வாயிலிட்டு மென்று சாப்பிட தலைச் சுற்று குணமாகும். காலை, மாலையாக மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்று ஏற்படாது.
பிரசவ காலத்தில் சுமார் 1௦ தினங்களுக்கு முன்பே தினசரி காலையில் மட்டும் அரைச் சங்களவு துளசிச் சாற்றை சாப்பிட்டு வந்தால், பிரசவ நேரத்தில் அதிகக் கஷ்டப்பட வேண்டியதிருக்காது. கஷ்டமின்றி குழந்தை பிறக்கும்.
எந்த வகை வந்தாவது கடித்து விட்டதாகத் தெரிந்தால், துளசிச் சாற்றையும், எலுமிச்சம்பழச் சாற்றையும் ஒரே அளவாகக் கலந்து, வண்டு கடித்த இடத்தில கனமாகப் பூசி விட வேண்டும். மருந்து காயக் காய அதன் மேலேயே மூன்று நாள் வரை பூசி வந்தால் எந்த வகையான வண்டு கடியானாலும் விஷம் இறங்கி விடும
அம்மை தோன்றுமென்று தெரிந்தவுடன் துளசி இலையையும், ஓமத்தையும் சம அளவாக எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, காலை, மாலை கோலிக் குண்டளவு உள்ளுக்குக் கொடுத்து வந்தால் அம்மை அதிக அளவில் போடாது. குறைந்த அளவில்தான் போடும்.
காலையிலும், மாலையிலும் 5 துளசி இல்லை வீதம் எடுத்து அத்துடன் ஐந்து மிளகையும் சேர்த்து நன்றாக மென்று விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து 40 நாட்கள் தின்று வந்தால் எந்த வியாதியும் உண்டாகாது.
தினமும் காலை, மாலை 5 துளசி இலை வீதம் வாயில் போட்டு மென்று வெந்நீர் குடித்து வந்தால் எந்த வகையான தோல் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும். அதோடு, துளசி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாகத் தடவி கால் மணி நேரம் கழித்துக் குளித்து விட வேண்டும்.
துளசிச் செடிக்கு மின்சார சக்தி உண்டு. எனவே அரை டம்ளர் அளவு துளசிச்சாற்றை உடனே கொடுத்துவிட்டால், மின்சாரத்தால் தாக்கப்பட்ட அதிர்ச்சி உடனே நீங்கி விடும். உடனே நல்ல உணர்வு ஏற்பட்டுப் பிழைத்துக் கொள்வார்.
பசியில்லாமல் வயிறு மந்தமாக தோன்றினால், 5 துளசி இலையையும், 5 மிளகையும் அரைத் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து மைபோல அரைத்து விழுங்கிவிட்டு, வெந்நீர் குடிக்க ஒரு மணி நேரத்தில் நல்ல பசி உண்டாகும்.
துளசிச் சாற்றில் சங்களவு எடுத்து, அரைத் தேக்கரண்டியளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி காலை, மாலை கொடுத்து வந்ததால் மூன்றே நாட்களில் குளிர் ஜுரம் குணமாகும்.
துளசி இலையைச் சருகுபோல காயவைத்து லேசாக வறுத்து நான்றாக தூள் செய்து, மூக்குப் பொடி போல உபயோகித்து வந்தால், மூக்கு சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
பாம்பு கடித்தாகத் தெரிந்தவுடன் கருந்துலசியின் சாற்றை எடுத்து அரை டம்ளர் அளவு குடிக்கக் கொடுத்துவிட வேண்டும். வாய் திறக்கவில்லை எனில் சாற்றை உடல் முழுவதும் பூசிவிட்டு, தொப்புளிலும், வாயிலும் ஊற்றி வைத்திருந்தாள் நோயாளி மயக்கம் தெளிந்து எழுந்திருப்பார். பிறகு உடல் முழுவதும் துளசிச் சாற்றை தடவி விட வேண்டும். நல்ல சுகம் ஏற்படும்.
தினசரி சங்களவு துளசிச் சாற்றைக் காலையில் மட்டும் தொடர்ந்து நாற்பது நாட்களுக்குக் கொடுத்து வந்தால், காக்காய் வலிப்பு பூரணமாகக் குணமாகும். பிறகு வரவே வராது.
புதிய வீடு கட்டும் பொழுது மஞ்சள் நீரில் நனைத்த சிறிய துணியில் 2௦ கிராம் துளசி வேறை முடிந்து, அதை நிலைக்காலின் மேல் வைத்துக் கட்டி விட்டால் அந்த வீட்டில் இடி விழாது. இது அனுபவப் பூர்வமாக அறிந்த உண்மை.
அரை டம்ளர் அளவு துளசி விதையை சுத்தம் செய்து அதை இரவு தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எடுத்து அம்மியில் வைத்து அரைத்துத் தேவையான சர்க்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும். இப்படி 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சம்பந்தப்பட்ட எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.
பாதிக்கப்பட்டவரை மல்லாக்கப் படுக்க வைத்து, கண் இரைப்பையைத் திறந்து பிடித்துக் கொண்டு, ஒரு சிட்டிகையளவு துளசி விதையைப் போட்டு இரப்பையை மூடி விட்டால், கால் மணி நேரம் கழித்து பாதிக்கப் பட்டவரை உட்கார வைத்து, கண்ணை மூடி மூடித் திறக்கச் செய்தால் உள்ளே விழுந்த பொருள் விதையுடன் சேர்ந்து வெளியே வந்துவிடும்.
துளசி இலை 1௦, மிளகு 12, சிற்றரத்தை இரண்டு புளியங் கொட்டையளவு எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, இளஞ்சூடாக இருக்கும் பொழுது இறுத்துத் தேவையானால் சர்க்கரை சேர்த்துக் குடித்துவிட வேண்டும்.
சக்கையை சட்டியிலே வைத்திருந்து, மாலையில் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து முன் போலக் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்று வேளை குடித்தால் இருமல் சரியாகி விடும்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.