அகமதாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானம் இதற்கு முன்னர் சர்தார்பட்டேல் மைதானம் என்றே கூறப்பட்டு வந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்ப மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மைதானத்தை திறந்து வைத்தார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனிருந்தார்.
பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த் : “இந்த கிரிக்கெட் மைதானம் பாரதபிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகவும் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தபோது புது மைதானத்திற்கான கட்டுமானபணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது” என்று கூறினார். அவருக்கு பின்பு உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” இந்த கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடியின் நெடுநாள் கனவு திட்டம். எனவே அவரது பெயரை வைக்க முடிவு செய்தோம். அதே சமயம் மாண்புமிகு வல்லபாய்படேல் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காகவே மைதானத்தின் உள்விளையாட்டு வளாகத்துக்கு அவரது பெயரை வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
வழக்கமாக தேசிய தலைவர்கள் இறந்தபின்பு அவர்களது பெயர்கள் அரங்குகளுக்கு சூட்டப்படுவது வழக்கமாகும். ஆனால், இது கிரிக்கெட்டில் அப்டியே உல்டாவாக காலகாலமாக நடந்துவருகின்றது. மும்பையின் பிராபோர்ன் மற்றும் வான்கடே ஸ்டேடியங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருந்தகாலத்திலேயே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயிரிடப்பட்து.
நவி மும்பையின் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பெங்களூரூ எம் சின்னசாமி ஸ்டேடியம், மொஹாலி ஐ.எஸ்.பிந்த்ரா ஸ்டேடியம் மற்றும் நமதுசென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் இவை அனைத்திற்கும் இதேபோல சம்பந்தப்பட்ட நபர்கள் இருந்தபோதே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |