ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

 அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடி ஊமத்தை. இதில் அரிதாகக் கிடைக்கும் கரு ஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாக உள்ளது. பொதுவாக நோய்த் தணிக்கவும், சிறப்பாக இசிவு நோய்த் தணிக்கவும் செயல்படுகிறது.

வெள்ளை பூ பூக்கும் ஊமத்தைச் சாதாரணமாய் எங்கும் கிடைக்கும். இது தவிர கரு ஊமத்தை, பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருஊமத்தை என்ற வகைகளும் உண்டு.

 

இதன் சமூலத்தை அரைத்து நாய்க்கடிப்புண், ஆறாத குளிப்புண், தோல் கட்டிகள், நஞ்சு, திரிதோடம் ஆகியவைகளைப் போக்கும்.

 

இதன் இலையை உலர்த்தி பொடி செய்து ½ (or) 1½ குன்றிமணியளவு உள்ளுக்குக் கொடுக்க சுவாச காசம் நீங்கும்.

 

இலையை வதக்கி ஒற்றடமிடக் கீல்வாதம்,  எலும்பு வீக்கம், வித்திருதி கட்டிகளினால் உண்டாகும் வேதனையும், பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனையும் நீங்கும்.

 

இலை, அரிசிமாவு இரண்டையும் சமமாக எடுத்துக் கொஞ்சம் நீர் விட்டரைத்து களிபதமாய் வேகவைத்து, எலும்பு மூட்டு இவ்விடங்களில் உண்டாகும் வீக்கம். இதனால் வேதனைத் தரும் கட்டிகள் வெளிமூலம் இவைகளுக்குப் பற்றிட குணமாகும். ஆனால் புண், காயம் இவைகளுக்குப் போடக் கூடாது. நரம்புச் சிலந்திக்கு இதை உபயோகிக்கலாம். இலை அல்லது பூ 75 கிராம் எடுத்து இடித்து 1 லிட்டர் நீருடன் சேர்த்துக் காய்ச்சி மேற்கண்ட நோய்களுக்கு ஒற்றடமிடலாம்.

 

கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு, பூவின்சாறு 1:3 துளி உள்ளுக்குக் கொடுத்து பால் சோறு, மோர் சோறு ஆகாரமாகக் கொள்ள பேய் நாய்க்கடி விஷம் தீரும். 3 நாட்கள் கொடுத்தால் போதும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும். தயிரில் இதன் சாறு 5 முதல் 10 துளி சேர்த்துக் கொடுக்க பிரமேகம் தணியும். இலை ரசத்தை 1 (or) 2 துளி காதில்விடக் காது கடுவழித் தீரும். வீக்கம் உள்ள இடங்களில் தடவலாம்.

 

ஊமத்தை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் காதில் விடச் சீதளத்தால் வந்த காதுவலி நீர்ந்து குணமாகும்.

ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி தூள் செய்து (ஒன்றிரண்டாய்) சுருட்டாய் செய்து புகைப்பிடிக்க ஆஷ்துமா, மூச்சுத்திணறல் உடனே குணமாகும்.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் ஆகியவை தீர்ந்து குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...