சமூகநீதியை காப்பதுபோல் எதிர் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன. ஆனால் பா.ஜ.க.,தான் இந்த நாட்டின் பலதரப்பு மக்களின் வாழ்வை உயர்த்த பாடுபடுகிறது” என பா.ஜ., தினத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
பா.ஜ., நிறுவன தினத்தை யொட்டி இன்று (ஏப்.06) கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலம் உரையாற்றுகையில் அவர் மேலும் பேசிய தாவது:
இந்நாள் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டிய நாள். ஹனுமன் ஜெயந்தி கொண்டாடும் நாளில் இப்போது இருக்கிறோம். ஹனுமன் ஒருதியாகி. இது போல் நாமும் இந்த நாட்டிற்கு உழைக்கவேண்டும். ஹனுமன் போல் பா.ஜ., உழைக்கிறது. இந்தியா இப்போது எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. 2014 முதல் இந்தியா புதியஉத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. அரசியல் கலாசாரத்தை மாற்றியது பா.ஜ., ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பா.ஜ., பாடுபட்டு வருகிறது.
இந்த தேசத்தின் வளர்ச்சியே பா.ஜ.,வின் தாரகமந்திரம். அனைத்து விஷயங்களிலும் உயர்ந்தது இந்த நாடுதான். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜ.,விரும்புவ தில்லை. சமூகநீதியே எங்களுக்கு முக்கியம். எதிர்கட்சிகள் சமூகநீதியை காப்பது போல் நாடகம் ஆடுகிறது. பெண்கள் அதிகாரத்திற்கு பா.ஜ., வழிவகுக்கிறது. காங்கிரஸ்கட்சி வாரிசு அரசியல் , இன வேறுபாடு வளர்த்தல் என்பதை பின்பற்றி வருகிறது. ஏழைகளையும், மலைவாழ் மக்களையும் காங்கிரஸ் இழிவாக பார்க்கிறது.
எதிர்கட்சிகள் நம்பிக்கை யில்லாதவை. அக்கட்சிகளால் யாருக்கும் பயன் கிடைக்காது.என்னை வீழ்த்த எதிர் கட்சிகள் பொய்சொல்கிறது. பா.ஜ., குறித்து தவறான பிரசாரத்தை எதிர் கட்சிகள் செய்து வருகின்றன .என்னை குழிதோண்டி புதைப்பதையே எதிர்ட்சிகள் சிந்தித்து வருகின்றன. ஆனால் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர் கட்சிகளின் சதியும் , பொய் பிரசாரமும் எடுபடாது.
காஷ்மீரின் அமைதி குறித்து கடந்தகால ஆட்சியாளர்கள் கவலைப்பட வில்லை. காஷ்மீரின் சிறப்புஅந்தஸ்து ரத்து, 370 வது சட்ட பிரிவு குறித்து எதிர் கட்சியினர் தவறான பிரசாரம் செய்தனர். ஏழைகளுக்கு கழிப்பறை , இலவச வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். 80 கோடி பேருக்கு இலவச ரேசன்பொருட்கள் கொடுத்துள்ளோம். இதுதான் சமூகநீதி. நாம் அனைத்து இந்தியர்களின் இதயங்களை வெல்லவேண்டும். இதற்கு பா.ஜ, காரிய தரிசிகள் பாடுபட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |