பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள்பதவியை ராஜினாமா செய்யவேண்டும்

 சி.பி.ஐ., எடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையிடு இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் வேளையில் இன்று அவைகள் சி.பி.ஐ., டைரக்டர் மூலமே வெளியாகியிருப்பதால் பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பா.ஜ.க, மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ., கடந்த சிலநாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவரஅறிக்கை தாக்கல்செய்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தங்கள் தரப்பு விவரத்தை அபிடவிட்டாக தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் சிபிஐ., டைரக்டர் ரஞ்சித்சின்கா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் எங்களின் அறிக்கைவிவரம் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை அவர் பார்த்தார் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., செய்திதொடர்பாளர் பிரதாப்ரூடி கூறியதாவது: நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சி.பி.ஐ., அதிகாரத்தில், மத்திய அரசு தலையிட்டுவருகிறது என கூறிவருகிறோம். இது இப்போது நிரூபணமாகி விட்டது . பிரதமரை காப்பாற்ற முயற்சிநடந்துள்ளது. எனவே சட்டஅமைச்சர் அஸ்வனி குமாரும், பிரதமரும் பதவி விலகவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...