அவதூறாக வழக்கு ஆசம்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள்குறித்து அவதூறாக பேசியவழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 பொதுத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக ஆசம்கான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், இருதரப்புக்கு இடையே மோதலை உண்டு பண்ணும் நோக்கில் ஆசம்கான் பேசியது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எனவே, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார். எனினும், இந்த வழக்கில் ஆசம் கான் ஜாமீன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசம் கானின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்கவாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசம்கான் தெரிவித்துள்ளார். தான் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அடுத்ததலைவராக ஆசம் கான் பார்க்கப்படுகிறார். ராம்பூர் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களிலும் ஆசம் கான் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அவர் மீது நில அபகரிப்பு, ஊழல் என 87 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றில் 27 மாதங்கள் சிறையில் இருந்த ஆசம் கானுக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உத்தரப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட் மாநில அரசுகள், வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசுபவர்கள்மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிக்கும் நிலைவரை அமைதி காக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஆசம் கானுக்கு எதிரான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...