மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, அகண்ட பாரதமே தீர்வு!

பிரிவினை – இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை.

மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, கலாசாரமும் ஒன்று, சுதந்திர போராட்டமும் ஒன்று. ஆனால், சூழ்ச்சியால் பிரிந்துபோனதோ மூன்று நாடுகள். இது யார் செய்த சதியோ? ஆய்வு செய்தாலும் முடிவுக்கு வராத விஷயமாகத்தான் போகும். ஆனால், இதற்கு மருந்திட்டு ஒன்றுபடுத்துவது ஆகக்கூடிய காரியமாகத்தான் படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் செய்தித் தொடர்பாளரும், பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளருமான ராம் மாதவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இணைந்து அகண்ட பாரதம் உருவாக வேண்டும் என்றும், இது மக்களின் நல்லெண்ணம் ஒற்றுமை மூலம் நடைபெறும், போரினால் அல்ல என்றும், மிக அழகாக எடுத்துரைத்திருந்தார். இந்தச் செய்தி புண்பட்ட மனதிற்கு மிக மிக ஆறுதலாக இருந்தது.

இதைச் சற்று ஆழமாக உற்று நோக்கினால் பல நன்மைகளும், உண்மைகளும் கிடைக்கும். அவர் சொல்லும்பொழுதே மிகவும் நளினமாகவும், நுணுக்கமாகவும், போரினால் அல்ல என்ற வார்த்தையை மிகவும் ஆழமாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஏனென்றால், வார்த்தை ஜாலம் பெற்ற சிலர் இவருடைய பேட்டியைத் தவறாக சித்திரித்தால் அது தவறான எண்ணத்திற்கு இட்டு சென்று விடக்கூடும் என்ற காரணத்தால், மிகவும் கவனமாக வார்த்தைகளை கையாண்டு நல்ல தொலைநோக்கு சிந்தனையை விதைத்துள்ளார்.

இந்தியத் துணைக்கண்டத்தின் பிரதான பகுதிகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய பகுதிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பகுதியாக கட்டுண்டு காணப்பட்டது. எதிரிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்து, முஸ்லிம் எனப் பிரிவினை வாதம் தூண்டிவிடப்பட்டு, ஒரு சில இயக்கங்களின் நயவஞ்சகத்தாலும், தலைவர்களின் ஆசை காரணமாகவும் நாடு கூறு போடப்பட்டது.

இந்தப் பிரிவினையில் ஏராளமான மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், துயரங்களுக்கும் ஆளானதோடு பல லட்சம் உயிர்களையும் இழக்க நேரிட்டு, அந்த வடு இன்று வரை மறையாமல் ஆதாயம் தேடும் சுயநல அரசியல்வாதிகள் சிலரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது கசப்பான உண்மை.

இதையும் தாண்டி, இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையருகே தினமும் இரு நாட்டு தேசியக் கொடிகளும் இறக்கப்படும் நிகழ்ச்சியில் இரு நாட்டு மக்களும் ஒருவரையொருவர் பார்த்து பறக்கும் முத்தம் (பிளையிங் கிஸ்) கொடுப்பதும், "ஏண்டா எங்களை (நாட்டை) பிரித்தீர்கள்' என்று கேட்பதும், "மீண்டும் ஒருங்கிணைங்கடா' என்று கோஷம் இடுவதும் தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது.

இதைப் பார்க்கும்போதெல்லாம் மக்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள், நாடுகள்தான் பிரிந்து இருக்

கின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது. இதை உணர்பவர்களுக்கு அகண்ட பாரதமே தீர்வு.

குறிப்பாக, இந்தியாவில் முஸ்லிம்களும், ஏனைய சில மதத்தவர்களும், பாகிஸ்தானில் இந்துக்களும், ஏனைய சில மதத்தினரும் சிறுபான்மையினர்களாக வாழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரம், கருத்து சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்றவை சட்ட ரீதியாக உறுதிபடுத்தப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளால் கோடிக்கணக்கான மக்கள் இன்னலுறுவதைக் காணமுடிகிறது.

இதைச் சமாளிப்பதும் நெறிப்படுத்துவதுமே அரசுக்கு பெரும்பாடாகி விடுகிறது. அகண்ட பாரதம் என்றவொரு நிலையால் மட்டுமே இதனை மாற்ற முடியும்.

இந்த மூன்று நாடுகளுக்கும் உள்ள போட்டியின் காரணத்தால் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதும் அல்லது உள்நாட்டுத் தீவிரவாதத்திற்குத் துணை புரிவதும், இதனால் மக்களைக் கொன்று குவித்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குவதும் தொடர்கதை ஆகிவிட்டது. இந்த பிரச்னையை அகண்ட பாரதத்தால்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள அதிகாரப் போட்டியின் காரணமாகவும், எல்லையை அபகரிக்கும் போட்டியின் காரணமாகவும் மூன்று நாடுகளும் சுமாராக ஆண்டு ஒன்றுக்கு ரூ.4.5 லட்சம் கோடி ராணுவத்திற்காக செலவிட்டு வருகின்றன.

அகண்ட பாரதம் ஏற்படுமேயானால் ராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையில் பெரும் பகுதி மிச்சப்படும். இதை அகண்ட பாரதத்தின் மக்கள் வளர்ச்சிக்காகச் செலவிட முடியும்.

இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ள காஷ்மீர் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வரும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சில உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகமாகவும், வேறு சில உணவுப் பொருள்களின் உற்பத்தி குறைவாகவும் உள்ளது. இந்த நிலையில் குறைவான பகுதிக்கு நிறைவாக உள்ள இடத்திலிருந்து எடுத்துச் செல்வது என்பது தற்போது பகைமையின் காரணமாக சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால் அகண்ட பாரதம் ஏற்படுமேயானால் அந்த பொருள்கள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க வாய்ப்பாக அமையும்.

ஊழல் புரியும் ஆட்சியாளர்கள், பல நேரங்களில் தங்கள் ஊழல்களை மறைக்க, உதாரணமாக, இந்தியாவில் உள்ளவர்கள் பாகிஸ்தானைக் காட்டி அச்சுறுத்தி ஊழல் மீதுள்ள மக்களின் கவனத்தை திருப்புவதும், அதேபோல் பாகிஸ்தானில் உள்ள ஆட்சியாளர்கள் இந்தியாவை காட்டி அச்சுறுத்தி ஊழல் மீதுள்ள மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையிலிருந்து அவர்களை வென்றெடுக்க அகண்ட பாரதம் மட்டுமே கைகொடுக்கும்.

இதனால் வளர்ச்சி பெற்ற, பெரிய மக்கள் சக்தி கொண்ட, சுமார் 170 கோடி மக்கள் தொகை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய நாடு உருவாகும். இந்த மூன்று நாடுகளில் இரண்டு நாடுகள் அணுசக்தி வல்லமை பெற்ற நாடுகள். இவை இணையும் பொழுது ஒரு சாந்தமான உலக வல்லரசு உருவாகும்.

குறைந்தபட்சம் இந்த மூன்று நாடுகளையும் இணைத்து யூனியன் (ஐரோப்பிய யூனியன் போல்) உருவாக்கினால் அகண்ட பாரதம் உருவாவது சாத்தியமாகிவிடும்.

ஆறு நாடுகள் சேர்ந்து "எமிரேட்ஸ்' என்று ஒருங்கிணையும்போது, பெர்லின் சுவர் உடைக்கப்படும்போது, வியத்நாம் பிரிவினை முடிவுக்கு வரும்போது, பல்வேறு இன, மொழி கடந்து பல்வேறு குடியரசுகள் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் சாத்தியப்படும்போது, ஏற்கெனவே ஒன்றாக இருந்து துரோகத்தால் பிரிக்கப்பட்ட நாம் ஏன் ஒன்றிணைய முடியாது? இதற்கு தடை என்ன இருக்கிறது?

மக்கள் மனதில் நல்ல எண்ணம் இருக்கும்போது, நம்பிக்கை இருக்கும்போது, ஒருமைப்பாடு இருக்கும்போது எதுவும் சாத்தியம்தானே? இதில் இலங்கையையும், நேபாளத்தையும்கூட ஒருங்கிணைக்கலாம். அப்படி இணைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்னை தீரவும், நேபாளத்தில் அரசியல் குழப்பம் தீரவும்கூட வாய்ப்பு ஏற்படும்.

விமர்சனத்திற்குள்ளானாலும்கூட, நமது பிரதமரின் பாகிஸ்தான் திடீர் பயணத்தால் நிச்சயமாக இந்த பிராந்தியத்தில் நன்மையையே ஏற்படும். என்ன நடந்தாலும் எதிர்காலத்தில் நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.

அந்தப் பயணத்தினால் ஏற்பட்ட தொடர்பை வாய்ப்பாக பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின்போது இந்தியாவின் சார்பாக இந்த யூனியன் உருவாவதற்கான கருத்தை பதிய வைக்க வேண்டும். இதற்கு இதை விடச் சிறந்த தருணம் வேறொன்றும் இருக்க முடியாது.

ஏனென்றால், அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமரை நமது பிரதமர் சந்தித்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் "இந்தியா குறித்து எதிர்மறையான கருத்துகள் ஏதும் கூறக் கூடாது' என்று அவரது அமைச்சரவைக்கு உத்தரவிட்டதையும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நமது பிரதமரின் திடீர் பயணத்திற்கு பின் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் பாரத பிரதமரின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்திருந்ததும், அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் உடல்நலக்குறைவுக்கு பாரதப் பிரதமர் நலம் விசாரித்திருப்பதும் நல்ல அறிகுறிகள்.

இதுபோன்ற அருமையான தருணத்தை பயன்படுத்திக் கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும், பங்களாதேஷும் முன்வர வேண்டும்.

அகண்ட பாரதத்தின் மூலம் ஏற்படும் தெற்காசிய அமைதிப் புரட்சி, உலக சமாதானத்திற்கான உத்தரவாதமாக மாறும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

கட்டுரையாளர்:

வழக்குரைஞர்.

எம்.ஜி.கே. நிஜாமுதீன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...