உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை பற்றிய கவலையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். நீங்கள் பயப்படுவதில் அர்த்தம் இல்லை. நீரிழிவு இன்று பலரையும் பாதிக்கும் நோயாக உள்ளது. எனவே நீங்கள் மட்டும் தனியாகப் பாதிக்கப்பட்டவர் இல்லை. இன் இந்நோய் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. அவையே இந்
நோய் பற்றிய பயத்திற்கு முக்கிய காரணமாகின்றன. நீரிழிவை அருவருக்கத்தக்க நோய் எனச் சிலர் வெறுக்கின்றன. குணமாக்க முடியாதது என வேறு சிலர் மனம் சோர்வடைகின்றனர். எமது வாழ்க்கையே முடிந்துவிட்டது என இன்னும் சிலர் மனக்கவலை அடைகின்றார்கள். இவை தவறானவை.
உண்மையில் இதை நோயென்று கூடச் சொல்ல முடியாது. உடற்தொழிற் பாட்டின் ஒரு சிக்கல்தான் நீரிழிவாகும். நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகாரிக்கிறது. அத்துடன் புரதம், மாப்பொருள், கொழுப்பு ஆகியவற்றையும் உடலால் உகந்த முறையில் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இந் நிலையைச் சாரி செய்தால் நீங்களும் ஏனையவர்களைப் போல சந்தோஷமாக பூரண வாழ்வைப் பெறலாம். இதை அடைய நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மட்டுமே.
இன்றைய நிலையில் நீரிழிவு நோய் வராமல் முற்று முழுதாகத் தடுக்க முடியாது. பூரணமாகக் குணமாக்கவும் முடியாது. அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.
Type -1: இதுபொதுவாக குழந்தைகளையும், இளம் பருவத்தினரையும் தாக்குவது. இன்சுலின்_சுரப்பது முழுவதுமாக நின்று விடுவதாலும், உடற் கலங்களுக்குள் இன்சுலின் செல்லமுடியாததாலும் இது உருவாகிறது . இவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் .
Type -2: 90% வீதமான நீரிழிவு நோயாளிகள் இந்த வகையையை சார்ந்தவர்கள். இங்கு இன்சுலின் ஓரளவு_சுரந்தாலும் உடலால் அதனை சிறப்பாக பயன் படுத்த முடியாததால் உடற் கலங்களுக்கு போதுமான இன்சுலின் கிடைபதில்லை. கவனமாக உணவுகளை உண்பதாலும், தினமும் உடற் பயிற்சி தவறாமல் செய்வதாலும் இதனை ஆரம்பநிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும். அவ்வாறு கொண்டுவர முடியாத_நிலையில் மாத்திரை மருந்துகளையோ , இன்சுலின் ஊசியையோ பயன்படுத்த வேண்டிநேரிடும்.
Type -3 இதுபொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்கிவந்தது. ஆனால் தவறான உணவு பலக்கவலக்கத்தாலும் , உடற்பயிற்சி இன்மையாலும் , அதீக உடல் பருமனாலும் இப்பொழுது இளம் வயதினரையும் பாதிக்கதொடங்கியுள்ளது. பள்ளிக்கூட பிள்ளைகள்_கூட இன்று பாதிக்கபடும் நிலை உருவாகியுள்ளது
நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.நமது குருதியில் உள்ள சர்க்கரை குளுக்கோஸ் ஆக இருக்கிறது. இதுவே நமது உடலின் செயற்பாட்டிற்கான சக்தியை வழங்குகிறது. எனவே இரத்தத்தில் குளுக்கோஸ் இருப்பது அவசியமானது கூட. ஆனால் இது சரியான அளவில் இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்திலுள்ள இந்த குளுக்கோசின் அளவு அதிகாரிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது இந்த இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் வைத்திருப்பதுதான்.
நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை அறிவதன் மூலமே தெரிந்து கொள்ள முடியும். சாப்பாடு உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது இந்த அளவு ( Fasting Blood Sugar 117 mg / dl) க்கு மேற்படாது இருக்கவேண்டும். இது புதிய அளவீட்டு முறையில் தொடக்கம் 6.1 mmol/L ஆகக் குறிப்பிடப்படுகிறது.
உணவு உண்ட பின்னும் (Post Prandial) சாப்பாட்டிற்கு இடைப்பட்ட நேரங்களிலும் (Random) இரத்தத்தைப் பாரிசோதிக்கலாம் . ஆயினும் அந் நேரங்களில் இரத்த குளுக்கோசின் அளவு 140 mg/dl (8.0mmol/L) க்கு மேற்படாது இருக்க வேண்டும்.
ஆனால் இந்த இரத்த குளுக்கோஸ் மிகக் குறைவாவதும் நல்லதல்ல. சர்க்கரை மட்டம் 60 mg/dl (3.3 mmol/L) க்குக் கீழ் குறைந்தால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை மட்டம் குறைவதால் (Hypoglycemia) ஏற்படக் கூடிய விளைவுகள் தெரிய ஆரம்பிக்கும். இன்னும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.
நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, தடுமாற்றம், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றவேண்டும் என்பதில்லை. ஒருசில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுங்கள்.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது? விரதம் இருப்பது, போதிய உணவு எடுக்காதது, காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடுமையான உடற்பயிற்சி, தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்து ஏற்றியது அல்லது தேவைக்கு அதிக நீரிழிவு மாத்திரைகள் எடுத்தது போன்றவற்றால் இது நிகழலாம். இவ்வாறு நேரும்போது உங்களிடம் குளுக்கோ மீட்டர் இருந்தால் உடனடியாக உங்கள் இரத்தத்தில் சர்க்கரை மட்டத்தை அளவிடுவது நல்லது. அதில் சர்க்கரை மட்டம் 60 mg/dl (3.3 mmol/L) க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை மட்டம் குறைந்து விட்ட நிலை (Hypoglycemia) எனக் கொள்ளலாம்.
இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் குடியுங்கள். இல்லையேல் ஒரு மேசைக் கரண்டியளவு சீனியை கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ அன்றி இனிப்புச் சேடாவோ குடியுங்கள் , அல்லது இரண்டு டொபி உட்கொள்ளவும். 10 நிமிடம் ஓய்வு எடுக்கவும். சுகம் தெரியும். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.