”வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை மதிப்போம்; இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்வோம்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

குடியரசு தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது நாட்டுக்கு நம் கடமைகளை நினைவுபடுத்துவதாகும். பல நாடுகளில் பன்முகத்தன்மை உள்ள மக்கள் வாழ்கின்றனர்.

ஆனால், அங்கெல்லாம் மோதல் உள்ளன. பாரதத்தில் மட்டும்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வாழ்க்கையின் இயற்கையான ஒன்றாக நாம் ஏற்றுள்ளோம்.

ஒவ்வொருவருக்கும் என தனிச் சிறப்புகள் இருக்கும். அதே நேரத்தில் மற்றவர்களிடமும் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையும், மற்றவர்களுடன் இணைந்த ஒன்று.

உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோலவே, நம் சுற்றுப்புறத்தையும், நாட்டையும் பார்க்க வேண்டும்.

நம் தேசியக் கொடியில் உள்ள தர்மசக்கரம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்றவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் வளர்ச்சியை காண்பதே, நாட்டின் வளர்ச்சி. நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது, மற்றவர்கள் முன்னேறவும் உதவிட வேண்டும்.

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். இதையே நம் தேசியக் கொடி, அதில் உள்ள வண்ணங்கள், அதில் இடம்பெற்றுள்ள தர்மசக்கரம் ஆகியவை நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...