காஷ்மீரை அபகரித்துவிடலாம் என்ற கனவை பாகிஸ்தான் கைவிடவேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யாராலும் மாற்றமுடியாது. காஷ்மீரில் பயங்கர வாதத்தைத் தூண்டிவிடுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.
பேச்சுவார்த்தைக்கு இந்தியா நிபந்தனைகளை விதிப்பதாக அவர் (நவாஸ் ஷெரீஃப்) பேசியுள்ளார். என்ன நிபந்தனைகளை அவருக்கு நாங்கள்விதித்தோம் என்பதைத் தெரிவிக்கவேண்டும். மத்திய அரசு பதவியேற்றபோது நிபந்தனை விதித்தா? அவரை வரவேற்றோம். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு செல்லும் முன்பு நிபந்தனை எதுவும் விதிக்கப்பட்டதா?
சமீபத்தில் பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த பலமுயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. ஆனால் அதற்கு பதிலாக பதான்கோட்டிலும், உரியிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்குத் தொடர்புள்ளது என்பதற்கு எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
காஷ்மீர் குறித்து இந்தியாமீது பாகிஸ்தான் பிரதமர் கூறும் குற்றச் சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. உரிமை மீறல்களை நிகழ்த் துவதாக மற்றவர்களை குறை கூறுவதற்கு முன்பு பாகிஸ்தான் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண மக்கள் மீது அந்நாட்டு அரசு மிகவும்மோசமான ஒடுக்கு முறை நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. இதுதான் அரசே நடத்தும் ஒடுக்கு முறைகளில் மிகவும் மோசமானது.
ஐ.நா.வால் பயங்கர வாதிகள் என்று அறிவிக்கப் பட்டவர்கள் ஒரு நாட்டில் (பாகிஸ்தான்) மட்டுமே சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இது போன்ற நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். ஐ.நா. போன்ற அமைப்புகளில் இருந்து அந்த நாடுகளை நீக்கவேண்டும். இந்த நாடுகள் பயங்கர வாதிகளை பாதுகாத்து வளர்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றன. அவர்களை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்.
முதல் முறையாக…: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தத்தை ஐ.நா.வில் உடனடியாக நிறைவேற்றவேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை பேசியது:
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.