பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம்

காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் நேற்று வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை குறிப்பிட்டு, ஜம்மு-காஷ்மீர் மீதான தனது நாட்டின் நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு இன்று கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம் அறிக்கை:

வெளிநாட்டினர் எப்படி நமது கழுத்து நரம்புக்குள் இருக்க முடியும்? இது இந்தியாவின் யூனியன் பிரதேசம். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எந்த சர்ச்சையும் இல்லை.

பாகிஸ்தான் சட்டவிரோதமாக கைப்பற்றிய கில்ஜிட்- பல்திஸ்தானில் மனித உரிமை மீறல்களை சரி செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பு கருத்துக்களை நிறுத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...