எம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

ஆர். கே., நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்துவரும் வேளையில் சென்னையில் முக்கிய அதிகாரிகள் அமைச்சர் விஜய பாஸ்கர், எம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இன்று (ஏப் -7) காலைமுதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி, கல்குவாரி உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. அமைச்சர் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா எதிரொலியாகவும் சோதனை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அமைச்சரின் இலாகாவின் கீழ்வரும் அரசு அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடை பெற்றுவருகிறது. ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகப் பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் சாட்சியமாக அமைந்துள்ளன.


அதிமுக ஆட்சிக்கு வருமான வரித் துறை சோதனை புதிதல்ல. அரவக் குறிச்சி தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிலமாதங்கள் கழித்து மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த சைதைதுரைசாமி வீட்டிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் முதல்-அமைச்சாரக இருந்தபோது தமிழகத்தின் தன்மானச் சின்னமான தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித் துறை சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக கோட்டையில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன்ராவ்  அலுவலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை செய்யப் பட்டு தமிழக நிர்வாக வரலாற்றில் ஒருகரும்புள்ளி வைக்கப்பட்டது. பிறகு மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...