கல்வி தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறை ரத்து – அண்ணாமலை

தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துள்ளது; மத்திய அரசை பொறுத்த வரை, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே நோக்கம்; இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது பேட்டி:

பயங்கரவாதிகள், நக்சல் ஆதிக்கம் உள்ள காஷ்மீர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், ‘ஓட்டு போடக் கூடாது; ஓட்டு போட்டால் கொலை செய்து விடுவோம்’ என, மக்களை அச்சுறுத்துகின்றனர்.

இதனால் தான் ஓட்டுப்போட்டவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவு மக்களுக்கு தரப்படாது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது, மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். இதை பா.ஜ., வரவேற்கிறது.

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கணிதம், அறிவியல் பாடங்களின் கல்வி திறன், இந்திய சராசரியை விட, தமிழகத்தில் குறைவாக உள்ளது. இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துள்ளது. தமிழக கல்வி தரத்தை, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டும். அதை விட்டு, பீஹாருடன் ஒப்பிட்டு பேச கூடாது. டில்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன்.
திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இம்மாதம் கடைசிக்குள், அமித் ஷா தமிழகம் வர வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், என் துாரத்து உறவினர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

நானும், செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஒரே கோவிலுக்கு செல்லும் உறவினர்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன், என் வீட்டிற்கு செந்தில் பாலாஜி வந்து, என் தாய் கையில் சாப்பிட்டு சென்றுள்ளார்.

நானும், ஜோதிமணியும் உறவினர்கள். கொங்கு பகுதியில் உள்ளவர்கள், ஏதோ ஒரு வகையில் உறவினர்கள். நானும், செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் எதிரும் புதிருமாக அரசியல் செய்கிறோம்.

என் ரத்த சொந்தத்தில், வருமான வரித்துறை சோதனை செய்தால், என்னிடம் கேள்வி கேட்கலாம். துாரத்து உறவினர் வீட்டில் நடக்கும் சோதனைக்கு, நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.ம� ...

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வத ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ரா� ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோ ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முட� ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏ� ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...