மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்றுமுதல், நாடு முழுதும் இது நடைமுறைக்கு வருகிறது.
பார்லிமென்ட் மையமண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன், இந்த வரிமுறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
நாடு முழுதும் நடைமுறையில் இருந்த பலமுனை வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக, ஒரே சீரான, ஒற்றைவரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை கொண்டுவருவதற்காக, கடந்த, 17 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல்வேறு சோதனைகள், தடைகள், எதிர்ப்புகளை மீறி, இந்த வரலாற்று சிறப்புமிக்க வரி விதிப்புமுறை, ஜூலை, 1 முதல் அமலுக்குவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அறிமுக விழா, பார்லிமென்ட் மையமண்டபத்தில், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்து களுடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஜிஎஸ்டி., வரி முறையை நாட்டுக்கு அறிமுகப் படுத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி.பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்கள் பங்கேற்ற விழாவில், அவர்களின் பலத்தகரகோஷங்களுக்கு இடையே, 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை' என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த வரி விதிப்பு முறை, நாடுமுழுதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.