காங்கிரஸ் 2.5 லட்சம்கோடியை வீணடித்திருக்கிறது நிதின் கட்கரி

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மேயர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது, இதில் உரையாற்றிய பாஜக தலைவர் நிதின் கட்கரி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை தி,மு,கவிடம் சரண்அடைந்து விட்டனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்,

எந்த வகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய் வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்தியஅமைச்சர்கள் சிலர் அடங்கிய தனி குழுவை பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தார். அந்த குழு தேவைஅல்ல துறையினுடைய அமைச்சரே முடிவு செய்வார் என தோழமை கட்சியான தி.மு.க வற்புறுத்தியதை ஏற்று கொண்டு 2006லேயே அத்துறை சம்பந்தபட்ட உரிமைகலை அமைச்சருக்கு விட்டு கொடுத்தார் பிரதமர்.

நடந்துள்ள முறைகேட்டில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர தங்களுக்கு பங்கு இல்லை என ஒதுங்க முடியாது. ஒதுக்கீடு எப்படி நடந்தது, அதில்பலன் பெற்றார்கள் யார் என்பது எல்லாம் காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்கும் நன்றாக தெரிந்தே இருந்தது

2 ஜி ஒதுக்கீட்டை முறையாக ஏல முறையில் விற்றிருந்தால் அரசுக்குச் சுமார் 1,76,000 கோடி கிடைத்திருக்கும் தில்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு செய்தஏற்பாடுகளில ஒன்னுக்கு மூணுமடங்கு விலை பேசப்பட்டு பொருள்கள் வாங்க பட்டுள்ளன. இந்த-வகையில் அரசுகு சுமார் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த இருஊழல்களிலும் சேர்த்து மொத்தம் 2.5 லட்சம்கோடி வீணடித்திருக்கிறது ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை, இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படிக் கூற முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுப்படுத்த தனித்திட்டம் வகுத்திருக்கிறோம். 2025ல் மாநிலத்தில் பாஜக செல்வாக்கு உள்ள கட்சியாக ஆட்சிநடத்தும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்துவோம்.பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் “தேசியஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்”.பாஜக எதிர்கால அரசியல் வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தேஇருக்கும். எங்களுடைய கட்சியின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவோம்’ என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...