1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு
2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி அளவு
3. நாவல் இலைகள் கைப்பிடி அளவு
4. கொய்யாமரத்து இலைகள் கைப்பிடி அளவு
5. மாந்துளிர்கள் கைப்பிடி அளவு
6. வெப்பாலை மரத்து இலைகள் கைப்பிடி அளவு
இவற்றை தனித்தனியே சுத்தம் செய்து 14 நாட்கள் நிழலிலும் ஒரு நாள் வெய்யிலிலும் உலர்த்தி ஒவ்வொன்றையும் தனித்தனியே இடித்து தூளாக்கி மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1. ஆலமரத்தின் பிஞ்சு விழுதுகள் சாண் அளவு கைப்பிடி அளவு
2. கருவேலமரத்தின் உட்பட்டைகள் உள்ளங்கை அளவில் 4 பட்டைகள்
3. மகிழமரத்து உட்பட்டை அளவு 4
4. வாகை மரத்து உட்பட்டை உள்ளங்கை அளவு 4 பட்டை. இவை ஈரமாக இருக்கும்போதே சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நசுக்கி வெய்யிலில் 3 நாட்கள் உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டு மருந்து கடைகளில் பொருட்களை வாங்கி பொடி செய்து கொள்ளவும்.
1. கல்நார் 5௦ கிராம்
2. லவங்கப்பூ 1௦௦ கிராம்
3. லவங்கப்பட்டை 1௦௦ கிராம்
4. மிளகு 5௦ கிராம்
5. களிப்பாக்கு 5௦ கிராம்
6. காசிக்கட்டி 5௦ கிராம்
7. சீரகம் 5௦ கிராம்
8. இந்துப்பு 5௦ கிராம்
9. படிகாரம் 5௦ கிராம்(பொரித்துக் கொள்ள வேண்டும்) இவற்றை வெய்யிலில் 2 நாட்கள் உலர்த்தி தனித்தனியே இடித்து தூளாக்கி மாச்சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது முதலில் கூறிய தழைகளின் தூள் இரண்டாவதாக கூறிய மரத்தின் பட்டை ஆலம் விழுதுத்தூள், மூன்றாவதாகக் கூறிய கடைச்சரக்குத் தூள் மூன்றையும் ஒன்றாகாக் கலக்க வேண்டும். இதில் 1௦௦ கிராம் உப்புத்தூளையும் 2௦ கிராம் கற்பூரத்தை தூள் செய்து அதையும் கலந்து ஒரு பெரிய பாட்டலில் இருப்பு வைத்து தினசரி இந்த பற்பொடியால் பல் விளக்கிவர எவ்வித கோளாறுகளும் வராமல் பற்கள் எதுவும் விழாமல் பாதுகாக்கலாம். 6 பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த தூள் ஆறுமாதம் வரை போதுமானதாக இருக்கும்.
ஒரு வேளைக்கு ½ ஸ்பூன் தூள் பல் விளக்கப்போதுமானது. பற்களை விளக்கிய பின் மித சூடான நீரில் வாயை 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும்.
நன்றி : சித்த மருத்துவத்தில் கண்கள் பாதுகாப்பு
– க. சின்னசாமி
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.