அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து

 ”ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றால் அதிகார அரசியல் என அர்த்தமே மாறி விட்டது,” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனைப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரில் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவு பகடேவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது:

முன்பெல்லாம் அரசியல் என்றால், சமூக சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றாலே அதிகார அரசியல் தான் என அர்த்தமாகி விட்டது.

ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றிய போது பல தடைகளை எதிர்கொண்டோம். அப்போது அங்கீகாரம் இருக்காது. எங்களது பேரணி மீது கற்களை வீசி தாக்குவர். அவசர நிலை காலத்திற்கு முன்பு நாங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ ரிக்சாவிற்கு தீவைத்தனர்.

தற்போது ஆயிரக்ணக்கான மக்கள் எங்களது பேச்சை கவனிக்கின்றனர். இந்த புகழுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. ஹரிபாவு போன்ற தொண்டர்கள் தான் காரணம். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கட்சியில் இருந்து எதுவும் கிடைக்காத நிலையிலும், நன்றாக உழைப்பவரே சிறந்த கட்சி தொண்டர். இவ்வாறு கட்கரி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...