தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்தஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைதுசெய்தது. இந்தசம்பவத்தை தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தகூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிடையே ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்தகூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது.

இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்புவிருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்புவிடுத்தது. இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

நீண்ட பாரம்பரியத்தை கொண்ட, அமைதி, அறிவுசார்ந்த சமூகத்தை கொண்ட மண்ணில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். உலகின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இந்தநாடு தற்போது உலகின் மிகப்பெரி பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறிவருகிறது.

18.5 கோடி முஸ்லிம்கள் உட்பட 130 கோடி மக்கின் வாழ்த்துக்களுடன் இங்கு வந்துள்ளேன். எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், மேற்காசியாவின் வளைகுடா பகுதியுடன் எங்கள் உறவு, செயல்பாடுகள் அதிகரித்துவருகிறது. வரலாறு திரும்புகிறது. நமது நாடுகளில் பலவும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கருப்பு நாட்களை சந்தித்தவை.

சுதந்திரத்துக்கு பிறகு ஒற்றுமை, நீதி, மரியாதை, வளம்கொண்ட நாடாக மாறிவருகிறோம். தீவிரவாதம் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்தமதத்துக்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களுமே அமைதியை போதிக்கின்றன. இஸ்லாம் மதமும் அப்படிதான். கடவுள் என்பது ஒருவர் தான். ஆனால் பாதைகள் தான் வேறானவை.

 

முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்காமல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத்குரேஷி புறக்கணித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதை தவிர்க்கவும், தர்மசங்கடமான சூழல் ஏற்படாமல் இருக்கவுமே பாகிஸ்தான் தரப்பில் இருந்தமுடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.