உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு சென்று முறையுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமான

உடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும். மேலும் "கற்பழிப்பு, கடத்தல்" போன்ற எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்தும் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள முடியும்.

எதிர்பாராமல் நடக்கும் ஆபத்துக்களுக்கு காரணம் நமது தனிமையும், அழகும், நம்மிடம் இருக்கும் உடைமைகளும்தான். இவற்றை இன்னொருவர் கைப்பற்ற நினைக்கும்போது ஆபத்து நமக்கு மிக அருகில் வருகிறது.

நவீன ஜிம்களில் இதயத் தசைகளுக்குத் தேவை யான உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்பு யுக்திகள் கற்றுத் தரப்படுகின்றன. அவைகளை முழுமை யாக கற்றுக் கொள்ள அகன்ற பரப்புடன் கூடிய வசதியான உடற்பயிற்சிக் கூடத்தை தேர்ந் தெடுங்கள். அங்கு குத்துச்சண்டைக்குப் பயன் படுத்தும் பேடுகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை வசதியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், உடற்பயிற்சி களைத் தொடர்ந்து முனைப்புடன் செய்யும் வழிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் போன்றவை பற்றியும் அவர்கள் கற்றுத்தர வேண்டும்.

உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், எலும்பு, மூட்டு இணைப்புகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் விதம் மற்றும் முதுகு வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள் போன்றவை முறையாக கற்றுத்தரப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 700 கலோரிக்கான சக்தியை செலவிடுகின்றனர். முதலில் குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கும் பயிற்சியாளர்கள், நாளடைவில் பயிற்சியின் மேல் உள்ள ஆர்வத்தில், படிப்படியாக அதிகளவு நேரத்தை ஒதுக்குகிறார்கள்.

முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியே பெண்களுக்கு தேவையான முழு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும்.

உடற்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்யும், உடற்பயிற்சி செய்ய, உடற்பயிற்சியில் , உடற்கல்வி, உடற் பருமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...