இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி எனப் பலவகையுள்ளன. பசுந்துத்தியின் பயனே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இலை பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணமுடையது.
துத்திப் பூவின் சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கற்கண்டு சேர்த்து பசும் பாலில் கொதிக்க வைத்து காலை வேளை மட்டும் ஏழுநாட்கள் கொடுத்துவர இரத்த வாந்தி குணமாகும்.
துத்திக் கீரையை ஆய்ந்து பருப்புச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்துத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டுவர மூலம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
இலையில் விளக்கெண்ணெய் தடவி தணலில் காண்பித்து துவள வதக்கி அதை ஆசனத்தில் வைத்துக்கட்டி வந்தால் மூலக்கடுப்பு குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
3obadiah