காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால் நிரம்பியது

காங்கிரஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து இன்று அருணாச்சல பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால் நிரம்பியுள்ளன’ என்று கறாராக விமர்சனம் செய்தார்.

நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, அறிக்கையின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கான குறைந்தபட்ச ஊதியத்திட்டம், விவசாய பட்ஜெட், கல்விக் கடன் ரத்து, நீட்தேர்வு விலக்கு, மீனவர் நலனுக்குத் தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘அவர்களுக்கு என்ன ஆயிற்று (காந்தி குடும்பத்தை நேரடியாக குறிப்பிடாமல்). ஒரு பக்கம் இந்த சவுகிதார், நாட்டை காப்பாற்றப் பார்க்கிறேன். இன்னொரு பக்கம் காங்கிரஸ், தரம்தாழ்ந்த வகையில் நடந்து கொள்கிறது. காங்கிரஸ் கை கோர்த்துள்ளது, குடிமக்களுடனா அல்லது தேசவிரோதிகளுடனா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து, ‘2019 நாடாளுமன்றத் தேர்தல் என்பது, உண்மைக்கும் பொய்க்கும் இடையிலானது. செயலாற்று பவர்களுக்கும் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கும் இடையிலானது. நம்பிக்கையானவர் களுக்கும் ஊழல்கறை படிந்தவர்களுக்கும் இடையிலானது. காங்கிரஸ், எப்போதும் வட கிழக்கு மாநிலங்களை கவனிப்பதில்லை. தங்களது தேர்தல் அறிக்கையிலும் வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் சேர்க்கவில்லை’.

இடஒதுக்கீடு முறையை ஒழிக்க பா.ஜ., அரசு முயற்சிப்பதாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் குற்றம்சாட்டி வருகிறது. நான் இருக்கும்வரை இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது.

பொதுப்பிரிவில் உள்ள நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்மக்களின் இடஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்காது. தேர்தல் நெருங்குவதால், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து வருகின்றன; இதை யாரும் நம்ப வேண்டாம். காங்., எப்போது ஆட்சிக்கு வந்தாலும் நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் பின்னோக்கிசெல்ல துவங்கிவிடும். வளர்ச்சி விகிதங்கள் குறையும்; பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கும்; வன்முறை தலைதுாக்கும்; கறுப்புபணம் குவிக்கப்படும்.

பாக்.,கின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம் மீது நம் விமானப் படை வீரர்கள் நடத்திய தாக்குதல் குறித்து எதிர் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இதன் மூலம் அவர்களது நடவடிக்கை அரசியல் கட்சிகளை போல் இல்லாமல் பாக்.,கின் செய்தி தொடர்பாளர்களை போல உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவோர் ஆட்சிக்கு வரவேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வரும் ஏப்ரல் 11 ம் தேதி, அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமாக 2 லோக் சபா சீட்டும், 57 சட்ட சபை சீட்டும் இருக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...