முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான மரம்.
கல்யாண முருங்கை இலையுடன் பச்சைப்பருப்பைச் சேர்த்துச் சமைத்து பிரசவமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அடிக்கடி சாப்பிட்டுவர குழந்தை பிறந்தபின் பால் குறைபாடு இருக்காது.
கல்யாண முருங்கை விதையின் பருப்பை எடுத்து நன்கு உலர்த்தி இடித்துச் சலித்து எடுத்தச் சூரணம் 5 அரிசி எடை கொண்டு அதில் கல்யாண முருங்கை இலைச்சாறு விட்டு குலைத்துச் சாப்பிட குடற்பூச்சிகள் வெளியேறும்.
கல்யாண முருங்கை இலைச்சாறு 500 மி.லியில் 600 கிராம் சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஒரு சீசாவில் சேர்த்து பத்திரப்படுத்தவும். இதில் 4 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டுவர ஒரு வாரத்தில் உடல் குறைய ஆரம்பிக்கும். தேவையான அளவு உடல்குறையும் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதை ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது.
கல்யாண முருங்கை சாற்றை காலை மாலை நான்கு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் மாதவிடாய்க்கு முன் பின் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
3astringent