தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு தேவை

நான் கேட்டபடி, ஏராளமான மக்கள் பலபுத்தகங்களை படித்து, அனுபங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில், அதிகளவு புத்தகங்களை படிக்க எனக்கு நேரம்கிடைப்பது இல்லை. ஆனால், உங்கள் மூலமாக, பலபுத்தகங்களில் உள்ள மையக்கருத்துகள் எனக்கு தெரியவந்துள்ளது.

தண்ணீர் சேமிப்பு குறித்து, பாரம்பரிய முறைகளை மக்கள் என்னிடம் பகிர்ந்துள்ளனர். மீடியாக்கள், இதனை பெரியஇயக்கமாக நடத்தி வருகின்றன. தண்ணீர் சேமிப்புக்கு அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாட்டில் முதல்முறையாக, தண்ணீர் கொள்கையை மேகாலாயா அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக மேகாலயா அரசிற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அரியானாவில், குறைந்தநீரை பயன்படுத்தப்படும் பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகளுக்கு இழப்புகுறைகிறது.தற்போது பண்டிகை காலம். இந்த காலகட்டத்தில், பலவிழாக்கள் நடக்கும். இதனை நாம் தண்ணீர் சேமிப்பு குறித்த செய்தியை அனைவருக்கும் அனுப்ப ஏன் பயன்படுத்த கூடாது? இந்த விழாக்களின் போது, தண்ணீர் சேமிப்பு குறித்து, தெரு நாடகங்கள் உட்பட பலவழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

விண்வெளியில், இந்தியாவின் சாதனைகள் குறித்து, நாட்டுமக்கள் பெருமைப் படுவார்கள் என நம்புகிறேன். விண்வெளி துறையில், 2019ம் ஆண்டு இந்தியாவிற்கு பலன் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். இந்தவிண்கலம், இந்தியர்களின் மனதில் நிறைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  விண்கலம். நிலவில் இந்தவிண்கலம் தரையிறங்குவதை பார்க்க காத்திருக்கிறோம்.இந்தவிண்கலம் நமக்கு பலவகைகளில் சிறப்பானது. சந்திராயன் 2 விண்கலம் மூலம், நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை நான் கற்றுகொண்டுள்ளேன். நமது திறமை மற்றும் தகுதிமீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தியாவின் விண்வெளி திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த வினாடி வினா போட்டியில் பங்கேற்கவேண்டும் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இதற்கான விவரங்கள் மை கவ் இந்தியா இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும்.

உலகை அச்சுறுத்தும் நோயாக புற்றுநோய் பரவி வருகிறது. மாஸ்கோவில் நடந்த சர்வதேச விளையாட்டு போட்டியில்,இந்தியாவை சேர்ந்த, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகள் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர்.

 

காஷ்மீரில் வெறுப்புணர்வை பரப்பி, வளர்ச்சிப் பணிகளை தடுக்க நினைப்பவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது,

“ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற “கிராமத்துக்கு திரும்புவோம்” நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமாக பங்கேற்றதை பார்க்கமுடிந்தது. வளர்ச்சிப்பணிகளில் இணைய காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது நல்ல அரசுவேண்டும் என்று காஷ்மீர் விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது.

தோட்டாக்களையும், குண்டுகளையும் விட வளர்ச்சியே வலிமையானது என்பதையும் இது நிரூபிக்கிறது. எனவே, வெறுப்புணர்வைபரப்பி, காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை தடுத்து நிறுத்துவதை முயற்சிப்பவர்களால் ஒரு போதும் வெற்றிபெற முடியாது என்பது திட்டவட்டமாக தெளிவாகியுள்ளது.

அமர்நாத் யாத்திரையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 3 லட்சம்பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2015-இல் 60 நாட்களில் பயணித்த பக்தர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம். இது காஷமீர் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும். இதேபோல் உத்தரகண்டிலும் கேதர்நாத் யாத்திரையில் 8 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் பயணித்துள்ளனர்.

நீர்சேமிப்பு விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. நீர் கொள்கையை சொந்தமாக வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா உருவாகியுள்ளது. குறைந்தளவிலான தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடிசெய்ய ஹரியாணா அரசு விவசாயிகளை ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி  இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஆற்றும் உரை .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...