மாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள்

தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.

பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்..? எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..? எவ்வளவு பணச் செலவு, நேரமிழப்பு, தேவையில்லாத பிரயாணங்கள் ஏற்படுகிறது ஒரு வழக்கில் நாம் தெரியாமலோ.. அல்லது நிர்பந்தத்தாலோ மாட்டிக் கொள்ளும் போது..? காலம் தாழ்ந்து கொடுக்கும் நீதிக்கும்… நீதி மறுப்பிற்கும் பெரிய வித்தியாசமே கிடையாதே..?

இந்த மேற்கொண்ட காரணங்களினால்தான் பொது மக்கள் போலீஸ் என்கவுண்டரால் பரவசமடைந்து போலீஸ்காரர்களை தலைக்கு மேல் அலாக்காக தூக்கிக் கொண்டாடியும், அவர்கள் மேல் மலர்களை வாரி இறைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்..!

23 வயது உன்னாவ் கற்பழிப்பில் பிழைத்தவரை அடித்தும், உதைத்தும், கத்தியால் குத்தியும், உயிரோடு கொளுத்தியும்… நிகழ்ந்ததா இல்லையா..?

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாள். அதற்காக நீதித்துறையை அணுகினாள். ஆனால் அப்படிச் செய்ததற்காகவே அவளை அடித்து, உதைத்து, உயிரோடு கொளுத்தினார்கள். நவம்பர் 30 வெளியே பெயிலல் வந்த அயோக்யன் மீண்டும் அவளை வழிமறித்து நாசப்படுத்தி… இன்று அவள் இறந்தும் போனாள்.

இதற்காகவா நம் நீதித்துறை..? நிர்பயாவாக இருந்தாலும் உன்னாவ் கற்பழிப்பில் பிழைத்தவராக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைத்தது..?

நேற்று ஏசி அறையில் உடகார்ந்து கொண்டு ஒரு பெண் வக்கீல் வீல் வீல் என்று கத்துகிறார் என்கவுண்டருக்கு எதிராக..! உயிரைப் பணயம் வைத்தது அந்த பெண் மட்டுமல்ல.. குற்றவாளிகளை அந்த இடத்திறகு அழைத்துச் சென்ற போலீஸ்காரர்களும்தான் என்று இவர்களுக்கு ஏன் தெரியப் போகிறது..? மனித உரிமை ஆர்வலர்களுக்கும், கம்னாட்டீஸ்களுக்கும், அரசியல் பிழைக்கும் காங்கிரஸ் வியாபாரிகளுக்கும் இப்படியெல்லாம் அயோக்யத்தனங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் மட்டும்தான் இவர்கள் குரல் எழுப்புவதாகக் காட்டிக் கொண்டு தங்கள் வியாபாரத்தைத் தொடர முடியும்.

தீர்ப்பு வழங்கும் வரை கற்பழித்தவனை குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று குரல் கொடுப்பவர்களே.. என்கவுண்டர் செய்த போலீஸ்கார்ர்களுக்கும் அந்த என்கவுண்டரில் உள்ள நியாயத்தை சொல்ல கோர்டில் சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமில்லையா..?

அதற்குள் அதனை போலி என்கவுண்டர் என்று பறைசாற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்..?

மாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள். திருந்த வேண்டியவர்கள் திருந்துக்கள். அதே சமயம் திருத்த வேண்டிய நடைமுறைகளையும் திருத்துங்கள். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வேண்டுமானால் முதலில் நடைமுறை சிக்கல்கள் களையப்பட வேண்டும். அதற்கு நம் நீதித்துறையில் இருப்பவர்கள் யதாஸ்தானத்திலிருந்து இறங்கி வர வேண்டும். இதெல்லாம் சரியானால் தானாக மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்..!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...