நாட்டில் ஒருவணிகத்தை நடத்துவதும் வாழ்வதும் எளிதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதுபோல நீதி கிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மாவட்ட சட்டச்சேவை அதிகாரிகளுக்கான முதல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாட்டின் மிகஅருமையான காலம் இது. அடுத்த 25 ஆண்டுகளில் நாடு மிகப் பெரிய முன்னேற்றங்களைக் காண்பதற்கான கொள்கைகள் வகுக்கப் பட்டுள்ளன. நாட்டில் வணிகம் மேற்கொள்வதும், மனிதன்வாழ்வதும் எளிதாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல நீதிகிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறினார்.
மேலும் , எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவரும் நீதித் துறையை அணுகுவது என்பது எளிதாக்கப் பட வேண்டும், அதைவிட, அனைவருக்கும் சமமாக நீதி வழங்கப்பட வேண்டியது மிக முக்கியம். இதற்கு, மிகவும் வலுவான சட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். நீதித்துறையின் உள்கட்டமைப்புகளை வலுவாக்க கடந்த எட்டு ஆண்டுகளில் நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |